சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறியவர்... நாளுக்கு ரூ 20 சம்பாதித்தவர் இன்று ரூ 104 கோடி மதிப்பு நிறுவனத்திற்கு உரிமையாளர்
குடும்ப பிரச்சனை காரணமாக 15 வயதிலேயே வெறும் 300 ரூபாய் பணம் மற்றும் உடைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியவர் இன்று நவ நாகரீக தங்க நகைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ரயில் நிலையத்தில் இரண்டு இரவுகள்
தமது 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சினு கலா, அடுத்து எங்கே செல்ல வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் மும்பை ரயில் நிலையத்தில் இரண்டு இரவுகள் தங்கியுள்ளார்.
வெறும் 300 ரூபாய் பணத்துடன் வெளியேறியவர்கள் இன்று தமது Rubans Accessories நிறுவனத்தினூடாக ஆண்டுக்கு சுமார் ரூ 40 கோடி வரையில் வருவாய் ஈட்டுகிறார்.
பெங்களூருவில் பிரபலமான வணிக வளாகம் ஒன்றில் 2014ல் சின்னதாக தொடங்கப்பட்ட Rubans Accessories பிராண்டானது இதுவரை 1 மில்லியன் எண்ணிக்கையிலான விற்பனையை முன்னெடுத்துள்ளது.
சினு கலா தற்போது கணவன் மற்றும் மகளுடன் பெங்களூருவில் குடியிருந்து வருகிறார். அவரிடம் BMW 5 series உள்ளது. வெற்றிகளை மட்டுமே குவித்து வருகிறார். ஆனாலும் நாளுக்கு 15 மணி நேரம் தமது நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் சினு கலா.
மொடலிங் துறையில் கால் பதித்து
பேஷன் நகைகளுக்கான இந்திய சந்தையில் ரூபன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு 25 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என்று சினு கலா குறிப்பிட்டுள்ளார்.
மும்பை மாநகரில் 10ம் வகுப்பு படிக்கும் போது, குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார் சினு கலா. அதன் பின்னர் அவரால் கல்வியை தொடர் முடியவில்லை. பிழைப்புக்காக கத்தி உள்ளிட்ட பொருட்களை வீடு தோறும் விற்பனை செய்தார்.
நாளுக்கு ரூ 20 சம்பாதித்தார். 2007ல் திருமணமனவர்களுக்கான அழகிகள் போட்டியில் முதல் 10 பேர்களில் ஒருவராக தெரிவானார். மொடலிங் துறையில் கால் பதித்து, சம்பாதித்தார். ஆனால் அதையே நீண்ட காலம் தொடர் முடியாது என்ற முடிவுக்கு வந்த சினு கலா 2014ல் பேஷன் நகைகளுக்கான கடை ஒன்றை திறந்தார்.
அமித் என்பவரை திருமணம் செய்துகொண்டு 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் Rubans Accessories என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். ரூ 3 லட்சம் முதலீட்டில் துவங்கப்பட்ட இந்த கடையானது 2018ல் ஐதராபாத் மற்றும் கொச்சி உள்ளிட்ட நகரங்கள் 5 எண்ணிக்கையாக உயர்ந்தது.
தற்போது Rubans Accessories என்ற நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 104 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |