மாதம் 18 ரூபாய்க்கு அன்று பாத்திரம் கழுவியவர்... இன்று ரூ 300 கோடி நிறுவன உரிமையாளர்
கர்நாடகா மாநிலத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து, மாதம் 18 ரூபாய்க்கு பாத்திரம் கழுவிய ஜெயராம், இன்று டெல்லியில் மட்டும் 30 உணவகங்களுக்கு உரிமையாளர்.
தந்தைக்கு பயந்து 13ம் வயதில்
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி பகுதியில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராம் பனன். இவரது நிறுவனம் தான் Sagar Ratna. டெல்லியில் மட்டும் Sagar Ratna நிறுவனத்திற்கு 30 உணவகங்கள் உள்ளன.
வட இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 60 உணவகங்களுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. பாடசாலை தேர்வில் தோல்வி கண்ட ஜெயராம், தந்தைக்கு பயந்து 13ம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார்.
1967ல் உடுப்பியில் இருந்து மும்பை மாநகருக்கு பேருந்தில் பயணப்பட்ட ஜெயராம், ஹொட்டல் ஒன்றில் மாதம் 18 ரூபாய்க்கு பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்தார். அதன் பிறகு டெல்லிக்கு வேலை தேடி சென்றவர் 1974ல் கேன்டீன் நிர்வாகம் ஒன்றை ஏற்றார்.
படிப்படியாக 1986ல் சொந்தமாக உணவகம் ஒன்றை தொடங்கிய ஜெயராம், தமது உணவகத்திற்கு சாகர் என பெயர் சூட்டினார். முதல் நாளில் 408 ரூபாய் வருவாயும் ஈட்டினார்.
தென்னிந்திய உணவு வகைகள் டெல்லி மக்களை ஈர்க்க, சாகர் உணவகம் பிரபலமடையத் தொடங்கியது. இதனையடுத்து டெல்லியின் லோதி சந்தை பகுதியில் இன்னொரு கிளையை தொடங்கியவர் சாகர் ரத்னா என பெயர் சூட்டினார்.
ஹொட்டலில் பாத்திரம் கழுவியவர்
அதுவே அவரது அடுத்தடுத்த கிளைகளுக்கு பொதுவான பெயரானது. தற்போது சாகர் ரத்னா உணவகங்கள் இந்தியா மட்டுமின்றி, கனடா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்திலும் செயல்பட்டு வருகிறது.
அத்துடன் 300 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுகிறது. 2001ல் ஸ்வாகத் என்ற பெயரில் உணவகங்களையும் ஜெயராம் நிறுவியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் 100 உணவகங்கள் வரையில் செயல்பட்டு வருகிறது.
மாதம் 18 ரூபாய்க்கு ஹொட்டலில் பாத்திரம் கழுவியவர், இன்று ஹொட்டல் தொழிலில் ஆண்டுக்கு பல கோடிகள் வருவாய் ஈட்டும் அளவுக்கு கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் உயர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |