வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு... கிராமப்பகுதியில் ரூ 8300 கோடி மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கிய தமிழர்
வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க, பலர் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளை தெரிவு செய்கிறார்கள். பெரும் நகரங்களில் பெருந்தொகை சம்பளத்துடன் வாழ்க்கை வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்ட பகுதியில்
ஆனால் தமிழரான ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் பெருந்தொகை சம்பளம் பெறும் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். மட்டுமின்றி, வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்ட பகுதியில், வெற்றியைக் குவிக்க முடியும் என்றும் நிரூபித்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், தமிழ் வழி கல்வியிலேயே தனது பாடசாலை கல்வியை முடித்தார். 1989ல் ஐஐடி மெட்ராஸில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் தனது பிஎச்டிக்காக அமெரிக்கா சென்றார்.
தொடர்ந்து, San Diego பகுதியில் அமைந்துள்ள Qualcomm நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இந்த நிலையில், இந்தியா திரும்ப வேண்டும் என்ற முக்கியமான முடிவை ஸ்ரீதர் வேம்பு எடுத்துள்ளார்.
அவரது இந்த முடிவு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவருக்கு முறையான ஒரு திட்டம் இருந்தது. 1996ல் தமது சகோதரருடன் இணைந்து AdventNet என்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
சந்தை மதிப்பு 100 கோடி அமெரிக்க டொலர்
2009ல் இருந்து இந்த நிறுவனம் Zoho Corporation என அறியப்படத் தொடங்கியது. தனது மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்காக சென்னை உட்பட எந்த பெருநகரங்களையும் தெரிவு செய்யாத ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை தெரிவு செய்து, அங்கு செயல்படாத ஒரு தொழிற்சாலையை தமது நிறுவனத்திற்காக உருமாற்றினார்.
2022ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் Zoho Corporation நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது 100 கோடி அமெரிக்க டொலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ 8,324 கோடி என்றே கூறப்படுகிறது.
மேலும் ஸ்ரீதர் வேம்புவின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது 3.75 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரியவந்துள்ளது. அத்துடன் Zoho Corporation நிறுவனத்தின் இன்னொரு உரிமையாளரான ராதா வேம்புவின் சொத்து மதிப்பு என்பது ரூ 34,900 கோடி எனவும் கூறப்படுகிறது. சகோதரர்கள் இருவரின் மொத்த சொத்து மதிப்பு என்பது இந்திய மதிப்பில் ரூ 391,33 கோடி என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |