ஒரு கப் சாதம் இருந்தால் போதும்.., 10 நிமிடத்தில் பஞ்சுபோல பணியாரம் செய்யலாம்
பொதுவாக வீட்டில் சமைக்கும் சாதம் மிஞ்சிவிடும். அதை வீணாக்காமல் பணியாரம் செய்யலாம்.
மிஞ்சிய சாதம் வைத்து பத்தே நிமிடத்தில் பஞ்சுபோல பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சாதம் 2 கப்
- ரவை 1 கப்
- அரிசிமாவு- 2 ஸ்பூன்
- வெங்காயம்- 2
- கேரட்- 2
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
- தேவையான அளவு- எண்ணெய்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சாதம் சேர்த்து அதனுடன் அரை கப் தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து, அதனுடன் ரவை, அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதனை 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அந்த மாவுடன்நறுக்கி வெங்காயம், கேரட், கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி மாவை ஊற்ற வேண்டும்.
பணியாரம் நன்கு வேகும்படி முன்னும் பின்னும் பிரட்டி வேகவைத்து எடுத்தால் சுவையான பணியாரம் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |