சாதம் மிஞ்சிவிட்டதா? 15 நிமிடத்தில் மென்மையான பரோட்டா செய்யலாம்
பரோட்டா என்பது பிரபல ஹொட்டல்களில் மட்டுமல்லாமல், ரோட்டுக்கடைகளிலும் பிரபலமான ஒரு உணவு ஆகும்.
அந்தவகையில், சாதம் பயன்படுத்தி செய்யப்படும் இந்த பரோட்டா மென்மையாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும்.
மிஞ்சிய சாதம் வைத்து 15 நிமிடத்தில் சுவையான பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சாதம்- 1கப்
- மைதா- 2கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மிஞ்சிய சாதம் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு வெண்ணெய் போல் அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து அரைத்த சாதத்துடன் மைதா, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் 2 நிமிடம் விட்டு விட்டு அரைத்துக்கொள்ளவும்.
மா நன்கு கெட்டியாக அரைந்து வந்ததும் அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
பின் இதன் மேல் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தடவி ஒரு மணி நேரம் அப்படியே மூடி போட்டு வைக்கவும்.
அடுத்து மாவை கை வைத்து 2 நிமிடம் நன்கு பிணைந்து கொள்ளவும். இதன் பிறகு சிறிய சிறிய உருண்டையாக உருட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதனைதொடர்ந்து உருண்டைகளை மைதா மா தெளித்து நன்கு தேய்த்து பரோட்டா போல் மாவை திரட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் பரோட்டாவை தவாவில் போட்டு எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்தால் சுவையான பரோட்டா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |