சமைத்த சாதம் மிஞ்சிவிட்டதா? மொறுமொறு வத்தல் செய்யலாம்
பொதுவாக வீட்டில் சமைக்கும் சாதம் மிஞ்சிவிடும். அதை வீணாக்காமல் இதுபோல் மொறுமொறு வத்தல் செய்யலாம்.
இந்த வத்தல் சாம்பார் சாதம், வத்தல் குழம்பு, புளிக்குழம்பு என அனைத்திற்கும் தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.
அந்தவகையில், பழைய சாதம் மீந்து போனால் எப்படி மொறு மொறுவென்று வத்தல் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம்- 1 கைப்பிடி
- காய்ந்தமிளகாய்- 2
- சீரகம்- 1 ஸ்பூன்
- உப்பு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 2 கொத்து
- சாதம்- 2 கப்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில், சின்ன வெங்காயம், காய்ந்தமிளகாய், சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதில் சாதம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து முறுக்கு பிழியும் குழாயில் அரைத்த கலவையை சேர்த்து ஒரு துணியில் பிழிந்து வெயிலில் காயவைக்கவும்.
பிறகு இது நன்றாக காய்ந்ததும் வத்தலை எடுத்து, அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் இந்த வத்தலை போட்டு பொரித்து சாப்பிட்டால் மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.
இதனை ஒரு டப்பாவில் போட்டு வைத்து நீண்ட நாட்களுக்கு வறுத்து சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |