பிரான்ஸ் பிரதமராக இடதுசாரிகள் முன்னிறுத்தும் தலைவர்... வெளிவரும் தகவல்

Emmanuel Macron Marine Le Pen Election
By Arbin Jul 08, 2024 11:40 AM GMT
Report

பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் மூன்று கூட்டணிகளும் அறுதிப்பெரும்பான்மையை எட்டாத நிலையில், குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.

பிரதமராக யாரை வேண்டுமானாலும்

தீவிர வலதுசாரிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், Marine Le Pen தலைமையிலான National Rally கட்சி 143 ஆசனங்கள் மட்டுமே பெற்று மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பிரதமராக இடதுசாரிகள் முன்னிறுத்தும் தலைவர்... வெளிவரும் தகவல் | Leftwing Candidate For Prime Minister

யாரும் எதிர்பாரத வகையில் இடதுசாரிகள் கூட்டணி 182 ஆசனங்களை வென்றுள்ளது. பொதுவாக அரசியலமைப்பின் படி ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாட்டின் அடுத்த பிரதமராக யாரை வேண்டுமானாலும் தெரிவு செய்யலாம்.

ஆனால் இதுவரையான நடைமுறையின் படி நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும். இதனால் அதிக ஆசனங்கள் வென்ற கட்சி அல்லது கூட்டணியில் ஒருவர் பிரதமராக பொறுப்புக்கு வருவார்.

தற்போது இடதுசாரிகள் கூட்டணி அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களுடன் வென்றுள்ளதால், அவர்களில் ஒருவர் நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுவார்.

பிரான்ஸ் பிரதமராக இடதுசாரிகள் முன்னிறுத்தும் தலைவர்... வெளிவரும் தகவல் | Leftwing Candidate For Prime Minister

இந்த நிலையில் தீவிர இடதுசாரிகள் கட்சி LFI தலைவர் Jean-Luc Mélenchon தெரிவிக்கையில், நாட்டை பிரான்சின் இடதுசாரிகள் ஆள்தற்கு தயாராக உள்ளோம், பிரதமர் Gabriel Attal வெளியேறலாம் என தெரிவித்துள்ளார்.

கூட்டணியின் ஒருமித்த கருத்தை

இடதுசாரிகளின் New Popular Front கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாக LFI இடம்பெற்றுள்ளது. இதனிடையே, LFI நாடாளுமன்ற உறுப்பினர் Clementine Autain மொத்த கூட்டணித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதுடன், திங்களன்று இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மட்டுமின்றி, கூட்டணியின் ஒருமித்த கருத்தை உட்கொண்டு முறையான ஆட்சியை முன்னெடுக்க முன்னாள் சோசலிஸ்ட் ஜனாதிபதி François Hollande அல்லது Jean-Luc Mélenchon ஆகிய இருவரில் ஒருவர் நாட்டின் புதிய பிரதமராக முன்னிறுத்தப்பட வேண்டும் என்று Clementine Autain குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் பிரதமராக இடதுசாரிகள் முன்னிறுத்தும் தலைவர்... வெளிவரும் தகவல் | Leftwing Candidate For Prime Minister

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் François Hollande தெரிவிக்கையில், தீவிர வலதுசாரிகளை மக்கள் மூன்றாமிடத்திற்கு தள்ளியது மனநிறைவை அளிக்கிறது. ஆனால் பிரெஞ்சு மக்கள் மீது ஒரு பெரிய பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது என்றார். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US