பிரான்சுடனான புலம்பெயர்தல் ஒப்பந்தம்: உருவாகியுள்ள சவால்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை பிரான்சிலேயே தடுத்து நிறுத்துவதற்காக, பிரான்சுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது பிரித்தானியா.
ஆனால், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஒரு புதிய சவால் உருவாகியுள்ளது.
பிரான்சுடனான புலம்பெயர்தல் ஒப்பந்தம்
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக, பிரெஞ்சு பொலிசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காகவும், பொலிசார் ரோந்துப் பணிகள் மேற்கொள்வதற்ககாவும், தடுப்புக் காவல் மையம் ஒன்றை உருவாக்குவதற்காகவும், பிரான்சுக்கு 660 மில்லியன் பவுண்டுகள் தர பிரித்தானியா ஒப்புக்கொண்டது.
PA Media
அந்த ஒப்பந்தத்தின் கீழ், தடுப்புக் காவல் மையம் ஒன்றை உருவாக்குவதற்காக பிரான்சுக்கு 160 பவுண்டுகள் கொடுக்க பிரித்தானியா சம்மதித்தாலும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த தொகையை கொடுப்போம் என பிரித்தானிய தரப்பு கூறியிருந்தது.
உருவாகியுள்ள சவால்
இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, 140 பேர் தங்கும் வசதி கொண்ட தடுப்புக் காவல் மையம் ஒன்றை பிரான்ஸ் கட்டிவருகிறது.
ஆனால், அதற்கு ஒரு சவால் உருவாகியுள்ளது. பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று, பிரான்ஸ் கட்டிவரும் தடுப்புக் காவல் மையம் உள்ளூர் திட்டமிடல் விதிகளுக்கு இணங்கவில்லை என்றும், ஆகவே, அந்த கட்டிடத்தைக் கட்டுவதற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அந்த கட்டிடம் குடியிருப்புப் பகுதில் இல்லை, அது, தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் உள்ளது என்று கூறும் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் வாதிடும் சட்டத்தரணிகள், அம்மோனியா மூலம் குளிரூட்டப்படும் ஒரு கிடங்கு உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு அருகில் அந்த இடம் அமைந்துள்ளதால், அங்கு வசிப்பவர்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |