கிரிக்கெட்டில் மிரட்டும் ஜாம்பவான்களின் மகன்கள்! யாரெல்லாம் தெரியுமா?
ஜாம்பவான்களாக விளங்கிய வீரர்களின் மகன்கள் யாரெல்லாம் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர் என்பது குறித்து பார்ப்போம்.
அர்ஜுன் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் ஆல்ரவுண்டர் வீரர் ஆவார்.
இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
அத்துடன் மும்பையின் 19 வயதிற்குட்பட்டோர் அணிக்காகவும் இவர் விளையாடியுள்ளார். 24 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார்.
25 வயதாகும் அர்ஜுன், கோவா கிரிக்கெட் அணி மற்றும் ஆகாஷ் டைகர்ஸ் எம்.டபிள்யூ அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
ஜேக் லெஹ்மன்
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான டெர்ரென் லெஹ்மன் மகன் ஜேக் லெஹ்மன். 33 வயதாகும் இவர் அவுஸ்திரேலிய அணிக்காக 33 டி20 போட்டிகளில் விளையாடி 341 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
எனினும் இவர் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தான்டோ நிதினி
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மஹாயா நிதினியின் மகனான தான்டோவும், தனது தந்தையைப் போலவே வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்.
இவர் 18 டி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 19 முதல்தர போட்டிகளில் 40 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ராக்கி பிளிண்டாப்
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆண்ட்ரு பிளிண்டாப்பின் மகன் ராக்கி பிளிண்டாப்.
இவர் தனது 16 வயதிலேயே சதம் விளாசி, தன் தந்தையின் சாதனையை முறியடித்தார்.
ஆஸ்டின் வாக்
அவுஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் வாக்கின் மகன் ஆஸ்டின் வாக். இவர் 22 ஜூனியர் போட்டிகளில் 733 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 139 என்பது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அத்துடன் 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார்.
தேக்நரைன் சந்தர்பால்
மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்பாலின் மகனான தேக்நரைன் சந்தர்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார்.
இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 560 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதம் அடங்கும்.
அன்வே டிராவிட்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட். இவர் 14 வயதிற்குட்பட்டோருக்கான அணியை வழிநடத்தியுள்ளார்.
2023-24 விஜய் மெர்ச்சண்ட் ட்ராபியில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆர்யவிர் சேவாக்
இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக்கின் மகனான ஆர்யவிர் சேவாக் அதிரடி வீரராக திகழ்கிறார்.
தந்தையைப் போலவே இவரும் துடுப்பாட்டத்தில் கலக்கி வருகிறார்.
இவர் 19 வயதிற்குட்பட்டோருக்கான முதல் தர கிரிக்கெட்டில், 17 வயதிலேயே 297 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
ஆர்ச்சி வாகன்
இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வாக்னின் மகனான ஆர்ச்சி வாகன், U-19 அணிக்கு தற்போது தலைவராக உள்ளார். மேலும், இந்திய அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |