''இந்த காக்கா, கழுகு கதையால் எந்த பிரயோஜனமும் இல்லை''- கலாய்த்த லெஜெண்ட் சரவணன்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜெண்ட் சரவணன், சினிமாவிலும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
கடந்தாண்டு வெளியான தி லெஜெண்ட் மூவி மூலம் என்ட்ரி கொடுத்த அவர், அடுத்தப் படத்துக்கு கதை கேட்டு வருகிறார்.
இதனிடையே பிரபல தொழில் அதிபர் லெஜண்ட் சரவணன் சமீபத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது காக்கா, கழுகு கதைகளால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று அவர் பேசியது வைரலாகி வருகிறது.
அவர் கூறுயதாவது..
எந்த ஒரு நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில் பொருளாதாரமும் மிகவும் வலிமை மிக்கதாக இருக்கும்.
ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார சுழற்சியில் வியாபாரத்துறை மிக முக்கிய பங்காற்றி வருகிறது.
ஒரு வெற்றிகரமான வியாபாரத்திற்கு அதில் உள்ள உண்மைத்தனமும், கடினமான உழைப்பும் மிக முக்கியமானதாகும்.
இன்றைய மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
ஆனால் அதில் காக்கா, கழுகு கதைகள், இவருக்கு இந்த பட்டம், அவருக்கு அந்த பட்டம் போன்ற விஷயங்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது.
நாம் உழைத்தால் மட்டும் தான் உயர முடியும். நாம் உயரந்தால் மட்டும்தான் நாடும் உயரும் என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |