புற்றுநோயுடன் போராடி வந்த கால்பந்து ஜாம்பவான் பீலே மரணம்!
பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பிரேசில் ஜாம்பவான் கால்பந்து வீரர் பீலே மரணமடைந்தார்.
உலகக்கோப்பை நாயகன்
எல்லா காலத்திலும் சிறந்த வீரராக கருதப்படுபவர் பிரேசில் அணியின் முன்னாள் வீரர் பீலே. மூன்று முறை உலகக்கோப்பை வென்ற சிறப்பு வாய்ந்தவரான பீலே, பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பீலே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தியை The Associated Press உறுதிப்படுத்தியுள்ளது. பீலேவின் இறப்பு செய்தி கால்பந்து உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை வெற்றிகள்
பீலே தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை 1958ஆம் ஆண்டு சுவீடனில் பெற்றார். அந்த தொடரின் அரையிறுதியில் ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார்.
அதன் பின்னர் 1962ஆம் ஆண்டு உலகக்கோப்பை யின் காயமடைந்த பீலே, 1970ஆம் ஆண்டு நடந்த மூன்றாவது உலகக்கோப்பையை தனது கைகளில் பெற்றார். அத்துடன் 4 கோல்கள் அடித்து தங்கப்பந்து விருதையும் வென்றார்.
சாதனை
ஃபிபா உலகக்கோப்பைகளில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையைப் படைத்து, கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம்பெற்றிருந்தார்.
தனது 16வது வயதில் பிரேசில் அணியில் களமிறங்கிய பீலே, 1971ஆம் ஆண்டு வரை தன் நாட்டிற்காக விளையாடினார்.