மீண்டும் விளையாட களமிறங்கும் சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன்... உற்சாகத்தில் ரசிகர்கள்
Legends League Cricket தொடரின் இரண்டாவது சீசன் செப்டம்பர் 16ஆம் திகதி இந்தியாவின் கொல்கத்தாவின் தொடங்கி நடைபெறவுள்ளது.
இந்த போட்டி சிறப்பு ஆட்டமாக இருக்கும் நிலையில் சீசன் அதிகாரபூர்வமாக செப்டம்பர் 17ல் தொடங்கும். மொத்தமாக 15 போட்டிகள் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு ஆட்டத்தில் இந்திய மகாராஜா அணியும். உலக ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக இந்த போட்டி நடைபெறுகிறது.
சனத் ஜெயசூர்யா, முரளிதரன், சவுரவ் கங்குலி, சேவாக், முகமது கைப்,ஜாண்டி ரோட்ஸ் போன்ற பல ஜாம்பான்கள் இந்த தொடரில் விளையாடவுள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்திய மகாராஜா அணி விபரம்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), சேவாக், முகமது கைப், யூசுப் பதான், பத்ரிநாத், இர்பான் பதான், பர்தீவ் படேல், பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, திண்டா, பிரக்யைன் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜோகிந்தர் சர்மா.
உலக ஜெயிண்ட்ஸ்:
இயன் மோர்கன் (கேப்டன்), லெண்டி சிமன்ஸ், கிப்ஸ், கேலீஸ், சனத் ஜெயசூர்யா, மேட் பிரியர், நாதன் மெக்குல்லம், ஜாண்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின், ஹமில்டன், ஹஸ்கர் ஹப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, ஓ பிரைன், ராம்டின்
AFP