மோசடி செய்து உலக அழகிப் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா? பார்படாஸ் அழகி பரபரப்பு குற்றச்சாட்டு
பிரியங்கா சோப்ரா 2000ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றார்
பிரியங்கா சோப்ரா தான் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் அறிந்த ஒரு வெளிப்படையான விடயமாக இருந்தது - லீலானி மெக்கோனி
பிரியங்கா சோப்ரா உலக அழகிப் பட்டம் வென்றது குறித்து சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றார்.
அதன் பின்னர் திரையுலகில் முன்னணி நாயகியாக கோலோச்சி ஹாலிவுட் படங்கள் வரை சென்று பெரிய உச்சம் தொட்டார். இந்த நிலையில், பிரியங்கா சோப்ரா மோசடி செய்து தான் பட்டம் வென்றார் என்று 'Miss Barbados' பட்டம் வென்ற லீலானி மெக்கோனி குற்றம்சாட்டியுள்ளார்.
பிரியங்கா சோப்ரா குறித்து அவர் கூறுகையில், 'இந்திய தொலைக்காட்சி அமைப்புகள் எடுத்த சில நடுநிலை தவறிய சார்பு நடவடிக்கையால் தான் பிரியங்கா சோப்ரா வெற்றி பெற்றார். 2000ஆம் ஆண்டில் உலக அழகிப்போட்டியை நடத்திய Sponcer நிறுவனமானது இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஆக இருந்தது.
பிகினி ஆடை சுற்றில் பிரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக போட்டியை நடத்தும் நடுவர்கள் விதிகளை மீறியுள்ளனர். மேலும், அவர் தான் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் அறிந்த ஒரு வெளிப்படையான விடயமாக இருந்தது' என தெரிவித்துள்ளார்.
லீலானியின் குற்றச்சாட்டிற்கு ஆதரவாகவும், விமர்சிக்கும் வகையிலும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.