ஜேர்மனியில் மக்கள் மீது காரை மோதிய நபர்: நீதிபதி அதிரடி முடிவு
ஜேர்மனியில், நேற்று முன் தினம் மக்கள் கூட்டத்தின் மீது வேண்டுமென்றே காரை மோதிய நபரை மன நல மருத்துவமனையில் வைக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
ஜேர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்
ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின்மீது வேண்டுமென்றே காரை மோதும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டேதான் இருக்கின்றன.

கடந்த ஆண்டில் மட்டுமே, மார்ச் மாதம், செப்டம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதத்திலும் இதேபோல் மக்கள் கூட்டத்தின் மீது வேண்டுமென்றே காரை மோதும் மூன்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், நேற்று, ஜேர்மனியின் சாக்ஸனி மாகாணத்திலுள்ள Leipzig நகரில், 33 வயதுடைய ஜேர்மானியர் ஒருவர் மக்கள் கூட்டத்துக்குள் வேண்டுமென்றே காரை செலுத்தியுள்ளார்.
கார் மோதியதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
நீதிபதி அதிரடி முடிவு
இந்நிலையில், மக்கள் மீது காரை மோதிய நபரை மன நல மருத்துவமனையில் வைக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் நடந்தபோது விபத்தை ஏற்படுத்திய நபர் சரியான மன நிலைமையில் இல்லை என்பதை நம்புவதற்கான காரணங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதி, அந்த நபர் மீண்டும் இதேபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பொதுமக்கள் நலனுக்காக அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதே நல்லது என கூறியுள்ள நீதிபதி, அவரை மன நல மருத்துவமனையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |