உடலின் வெப்பத்தை தணிக்கும் லெமன் ஐஸ் டீ செய்வது எப்படி?
கோடைகாலம் என்றாலே முதலில் பலரும் எதிர்பார்ப்பது குளிர்ச்சியான பானம் தான். அதிலும் பலருக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது லெமன் ஐஸ் டீ.
இது பலவிதமான பொருட்களால் செய்யப்படும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இதை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சர்க்கரை சிரப் செய்ய
- தண்ணீர் - 1 லிட்டர்
- சர்க்கரை - 1 1/2 கப்
- எலுமிச்சைப்பழதோல்
- புதினா இலை
லெமன் ஐஸ் டீ செய்ய
- தண்ணீர் - 1 லிட்டர்
- டீ தூள் - 2 தேக்கரண்டி
- சர்க்கரை சிரப்
- எலுமிச்சைப்பழச்சாறு - 4 பழம்
- ஐஸ் கட்டிகள்
செய்முறை
1. முதலில் சர்க்கரை பாகு செய்ய, எலுமிச்சைப்பழத்தின் தோலை தனியாக எடுத்து வைக்கவும்.
2. அடுத்து எலுமிச்சைப்பழத்தின் சாறை பிழிந்து வைத்து கொள்ளவும்.
3. ஒரு சாஸ் பானில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்க்கவும்.
4. சர்க்கரை கரைந்ததும் எடுத்து வைத்த எலுமிச்சைப்பழத்தின் தோலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
5. பிறகு அடுப்பை அணைத்து விட்டு புதினா இலையை சேர்த்து இறக்கி வைக்கவும்.
6. லெமன் ஐஸ் டீ செய்ய, தண்ணீரை கொதிக்க வைத்து டீ தூள் சேர்த்து அதிக தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
7. பின்பு டீ யை வடிகட்டி, இதனுடன் சர்க்கரை பாகையும் வடிகட்டி சேர்த்து நன்கு கலந்து விட்டு ஆறவிடவும்.
8. ஆறிய பிறகு எலுமிச்சைப்பழத்தின் சாறையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
9. ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டிகள், எலுமிச்சைப்பழதுண்டுகள், புதினா இலை, லெமன் டீ ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து லெமன் ஐஸ் டீ யை ஜில்லென்று பரிமாறவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |