லெமன் டீ நல்லது தான்.. ஆனால் இந்த ஆபத்துகள் இருக்கிறதே! கவனமா இருங்க
உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் விரும்பப்படும் ஒரு பானம் என்றால் அது தேநீர் தான். தேநீர் ஒரு நாட்களை ஆரம்பிக்க புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாமல் இனிமையாக ஆரம்பிக்கவும் உதவுகிறது.
டீயில் பிளாக் டீ, மசாலா டீ ,ஹெர்பல் டீ, க்ரீன் டீ போன்ற பலவிதமான டீ வகைகள் உண்டு.
இப்போது பலரும் எடை இழப்பிற்க்காகவும் ஆரோக்கியத்திற்காக லெமன் டீயை பருகுகிறார்கள். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு கப் லெமன் டீ நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று எடுத்துக்கொண்டாலும் இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது.
ஏன் ஆபத்தானது?
எலுமிச்சை இயற்கையாகவே அமிலத்தன்மையை கொண்டுள்ளது, மேலும் தேநீரில் அமிலத்தன்மை உள்ளது.
எனவே இரண்டு அமிலத்தன்மையும் சேரும்போது தேநீரில் உள்ள அமிலத்தன்மை அதிகரிக்கிறது. எனவே அதிகப்படியான அமிலத்தன்மை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கெடுக்கும்.
அதிக அளவு லெமன் டீ குடிப்பதால் , பற்சிப்பி அரிப்பு, பல் உணர்திறன், அமில ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
லெமன் டீ குடிப்பதால் உண்டாகும் பக்கவிளைவுகள்
தேநீரில் எலுமிச்சை சாறு சேர்ப்பதன்மூலம் அதன் அமில அளவை அதிகரிக்கிறது, இது உடலின் செரிமானத்தை மெதுவாக்கும். மேலும் நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ், வீக்கம் மற்றும் மலச்சிக்கலைத் தூண்டும்.
உடலில் அமிலம் அதிகரிப்பதன் காரணமாக வளர்சிதை மாற்றங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடலின் நீர்மட்டத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, பல்வேறு உடல்நலக் கோளாறுகள் உண்டாகும் . இதனால் லெமன் டீயை குடித்த பிறகு தலைவலி மற்றும் உடல் உபாதைகள் ஏற்படும்.
stylecraze
எலுமிச்சையில் உள்ள அமிலத்தின் அளவு பற்களின் பற்சிப்பிக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. தேயிலை மற்றும் எலுமிச்சையை இணையும்பொழுது அமிலத்தன்மை அதிகரிக்கிறது.
அரிப்பு செயல்முறை ஏற்பட்டு, பல் இழப்புக்கு வழிவகுக்கும். மேலும் லெமன் டீயைக் குடித்த பிறகு கடுமையான வலி மற்றும் உணர்திறன் ஏற்படும்.
எலுமிச்சை சிறுநீர் மூலம் கால்சியத்தை வெளியேற்றுவத்தால் எலும்புகளில் போதிய கால்சியம் அளவை குறைத்து எலும்புகளை பலவீனமாக்குகின்றன.
மேலும் லெமன் டீயை ஒருநாளைக்கு 1/2 கப் க்கும் குறைவாக குடித்துவர நல்லது. உடலில் அதிகப்படியான அமிலத்தன்மை இல்லாததால் புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் சாத்தியமான நன்மைகளை அனுபவிக்க இது உங்களை அனுமதிக்கிறது.
லெமன் டீயை மாலை அல்லது இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வெப்பம் மற்றும் செரிமானத்துடன் தொடர்புடையதால் இந்த நேரத்தில் லெமன் டீயை உட்கொள்வது உடலின் இயற்கையான சமநிலையை சீர்குலைத்து, தூக்கத்தை பாதிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |