வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடிப்பது நல்லதா? கெட்டதா?
பொதுவாக உடல் எடையை குறைக்கும் வீட்டு வைத்தியங்களின் பட்டியலில் முதலில் இருப்பது, தேன் மற்றும் எலுமிச்சை சாறு தான்.
பலர் இதை ஒரு காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சை நீரை குடிப்பது சிலருக்கு மோசமானதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஏனெனில் சில சந்தர்ப்பங்களில், இந்த பானம் வயிற்றில் எரியும் உணர்வு மற்றும் வயிற்று வலியைக்கூட ஏற்படுத்தும்.
அந்தவகையில் வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதாக இல்லையா? என்பதை பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்வது?
இந்த பானம் தண்ணீர் மிகவும் சூடாக இருக்கக்கூடாது. மேலும் 200 முதல் 250 மில்லி தேன் சிறிதளவு எலுமிச்சை நீரை சேர்த்து தினமும் ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும். இரண்டு மாதங்கள் இந்த பானத்தை குடித்து வாருங்கள்.
நன்மைகள்
- தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிக்கவேண்டும்.
- தொப்பை கொழுப்பை குறைக்க விரும்பினால், தினமும் காலை வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்த இந்த பானத்தை குடியுங்கள்.
- படுக்கைக்கு முன் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுவது, நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், செரிமானம், உடல் மற்றும் மனதை தளர்த்தவும் உதவுகிறது.
- தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தேன் குடித்து வந்தால் உடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும்.
யார் தவிர்க்க வேண்டும்?
- வயிற்றுப்புண் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த பானத்தை உட்கொள்ள வேண்டாம்.
- நீரிழிவு நோயாளியாக இருந்தால், நீங்கள் சர்க்கரை, தேன் அல்லது பிரக்டோஸ் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
- நீங்கள் சமீபத்தில் எடை இழப்பு அறுவை சிகிச்சை என்று அழைக்கப்படும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்திருந்தால், இந்த பானத்தை குடிக்க வேண்டாம். உப்பு மற்றும் சர்க்கரைக்கு உடலின் உணர்திறனை அதிகரிக்கும் உணவுகளிலிருந்து தினமும் விலகி இருப்பது நல்லது.