இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன்! 37 வயதில் ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர்
மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் லெண்டில் சிம்மோன்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியில் 2006ஆம் ஆண்டு அறிமுகமான துடுப்பாட்ட வீரர் லெண்டில் சிம்மோன்ஸ்.
அதிரடி ஆட்டக்காரரான இவர் 68 ஒருநாள், 68 டி20 மற்றும் 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். சிம்மோன்ஸ் 2015ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.
டி20 போட்டியை பொறுத்தவரை 2021ஆம் நடந்த உலகக் கோப்பை தொடரில் கடைசியாக பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது 37 வயதாகும் சிம்மோன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
timesofsports
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'டிசம்பர் 7, 2006 அன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முதல்முறையாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டின் மெரூன் நிறத்தை அணிந்தபோது, எனது சர்வதேச வாழ்க்கை 16 ஆண்டுகள் நீடித்திருக்கும் என்று எனக்குத் தெரியாது.
ஆனால், விளையாட்டின் மீதான எனது ஆர்வமும் அன்பும் என்னை ஒவ்வொரு நாளும் தூண்டியது. நான் இன்னும் விரிவான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். என்னை ஒப்பீட்டளவில் பொருத்தமாக வைத்திருக்கிறேன். எனவே, எனது உடல் அனுமதிக்கும் வரை Franchise (கவுண்டி) கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடுவதே எனது கவனம்.
நான் இன்னும் சில ஆண்டுகள் என் பிராந்தியத்தில் உள்ள மக்களையும், உலகெங்கிலும் உள்ள மக்களையும் மகிழ்விக்க முடியும் என நம்புகிறேன். நான் 144 போட்டிகளில் விளையாடி 3,763 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டின் இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.