முதல் நாளே இவ்வளவு வசூலா? வாரி குவிக்கும் விஜயின் ''லியோ''
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடிப்பில் வெளியான லியோ படமானது வெளியாகி ஒரே நாளில் வசூலில் சாதனைப்படைத்துள்ளது.
வசூல் சாதனை
நேற்று வெளிவந்த லியோ திரைப்படம் முதல் நாள் மட்டுமே உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதுவரை தமிழ் சினிமாவில் இருந்து எந்த ஒரு திரைப்படமும் முதல் நாள் ரூ. 120 கோடி வரை வசூல் செய்தது கிடையாது. இதை லியோ முறியடித்து சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்த வாரம் இறுதிக்குள் லியோ படத்தின் வசூல் மாபெரும் உச்சத்தை தொடும் என திரை வட்டாரங்கள் எதிர்பார்த்து இருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |