த்ரிஷா இறந்துபோய்டுவாங்க...? லோகேஷ் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது இவர் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
கோடிக்கணக்கில் பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் வரும் அக்டோம்பர் 19ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
லோகேஷ் பேச்சு
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை வைத்து படம் இயக்குவேன். மேலும், லியோ படத்தை பற்றி இப்பேதே சொல்லிவிட்டார் சுவாரஸ்யம் இருக்காது. 'லியோ' படம் கைதி மாதிரியான படம். இப்படத்தில் கதாநாயகிகள் இறந்துவிடுவார்கள் என்று கூறினார். அதற்கு ஒரு மாணவன் த்ரிஷாவிற்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூற, லோகேஷ் சிரித்துக் கொண்டே உங்கள் நாயகிக்கு எதுவும் ஆகாது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |