நீச்சல் போட்டியில் உலக சாதனை படைத்த 22 வயது இளம் வீரர்
உலக நீச்சல் போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லியோன் மர்சந்த் உலக சாதனைப் படைத்துள்ளார்.
உலக சாதனைப் படைத்த இளம் வீரர்
ஜப்பான் நாட்டின் ஃபுகுவோகாவில் உலக அக்வாடிக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது.
இப்போட்டியில் ஆண்களுக்கான தனி நபர் 400 மீட்டர் மெட்லே வகை நீச்சல் போட்டியில் இறுதிச் சுற்று நடைபெற்றது. இப்போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 22 வயது கொண்ட லியோன் மர்சந்த் கலந்து கொண்டார்.
இவர் 400 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்கள் 2.50 வினாடிகள் கலந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று உலக சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நீச்சலில் ஜாம்பவானான பெல்ஸின் சாதனையை முறியடித்துள்ளார்.
தற்போது சமூகவலைத்தளங்களில் லியோன் மர்சந்த்திற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
THIS IS UNBELIEVABLE ?
— World Aquatics (@WorldAquatics) July 23, 2023
??Leon Marchand beat the longest World Record in the books after 21 years!!!@FFNatation #AQUAFukuoka23 pic.twitter.com/Jkzwmp0xFb
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |