ஜங்கிள் சஃபாரிக்குள் புகுந்து மானை வேட்டையாடிய சிறுத்தை.., அதிர்ச்சியில் மேலும் 7 மான்கள் உயிரிழப்பு
ஜங்கிள் சபாரி பகுதிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து மானை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மானை வேட்டையாடிய சிறுத்தை
இந்திய மாநிலமான குஜராத், ஒற்றுமை சிலை அருகே உள்ள ஜங்கிள் சஃபாரிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று கரும்புலி வகை மான் ஒன்றை வேட்டையாடியுள்ளது.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்ச்சியில் மேலும் ஏழு மான்கள் இறந்தன. இச்சம்பவம் ஜனவரி 1ஆம் திகதி இரவு நடந்துள்ளது.
உலகின் மிக உயரமான சிலைக்கு அருகில் அமைந்துள்ள ஜங்கிள் சஃபாரி, ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும், பரந்த வனவிலங்கு இனங்களின் இருப்பிடமாகவும் உள்ளது.
2 முதல் 3 வயதுடைய சிறுத்தை ஒன்று, குஜராத்தில் சூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலய ஜங்கிள் சபாரி பகுதிக்குள் நுழைந்துள்ளது. அங்கு, அடைப்புக்குள் இருந்த கரும்புலி வகை மான் ஒன்றை வேட்டையாடியுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 8 மான்கள் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும், வனத்துறையின் துணைப் பாதுகாவலர் (டிசிஎஃப்) அக்னீஸ்வர் வியாஸ் கூறுகையில், "சிறுத்தை ஒன்று திடீரென அடைப்புக்குள் நுழைந்ததால் பீதியை ஏற்படுத்தியது.
அப்போது அங்கிருந்த காவலர்கள் அதை விரட்ட முயற்சித்த போதிலும் கரும்புலி வகை மானை சிறுத்தை கொன்றது. இதனால் அதிர்ச்சியில் மற்ற 7 மான்கள் உயிரிழந்தது" என்றார்.
ஜங்கிள் சஃபாரி சூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலயம் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு சிறுத்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
இந்த ஜங்கிள் சஃபாரி பூங்கா சிசிடிவி கமராக்களின் உதவியுடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற நாளில் சிசிடிவி கமராவில் பூங்காவிற்குள் சிறுத்தை நுழைவதைக் காட்டுகிறது. ஆனால், ஜங்கிள் சஃபாரியை விட்டு சிறுத்தை வெளியேறிவிட்டதா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |