AC மின்கட்டணம் குறைவாக வர வேண்டுமா? இந்த 5 டிப்ஸை தவறாமல் பின்பற்றுங்கள்
நீண்ட நேரம் AC ஓடினாலும் மின்கட்டணம் குறைவாக வருவதற்குரிய சில டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.
ஆனால், நீண்ட நேரம் AC ஓடினால் மின்கட்டணமும் தலைசுற்றும் அளவுக்கு வந்துவிடும். அதை எப்படி குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
Air filter பராமரிப்பு
உங்களது AC -யில் உள்ள Air filter -ல் தூசு அல்லது அழுக்கு அடைத்து இருந்தால் அது காற்றோட்டத்தை பாதிக்க கூடும். இதனால் உங்களது அறை குளிர்ச்சியாவதற்கு அதிக நேரம் எடுக்க நேரிடும்.
ஒவ்வொரு 1 - 2 மாதங்களுக்கு ஒருமுறை Air filter -யை மாற்ற வேண்டும். இதனால், சிறந்த காற்றோட்டத்தை உறுதி செய்து, உங்கள் ஏசி வேலை செய்ய சிரமப்படுவதை தடுக்கிறது.
அறையை Sun shield செய்யவும்
உங்களது வீட்டில் உள்ள ஜன்னல் வழியே சூரிய ஒளி நுழைந்து அறையை வெப்பப்படுத்தும். இதனால் உங்களது AC கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
இதற்காக Blackout curtains அல்லது reflective window films -களை பயன்படுத்துவது அறைக்குள் வெப்பம் அதிகரிப்பதை தடுக்க உதவியாக இருக்கும்.
விரிசல்கள் மற்றும் இடைவெளிகள்
ஜன்னல்கள் மற்றும் கதவுகளைச் சுற்றியுள்ள சிறிய இடைவெளிகள் மற்றும் விரிசல்கள் வழியே AC வெளிப்படுத்தும் குளிர் காற்று வெளியேறும்.
இந்த காரணத்தினால் குளிர்காற்று வெளியே செல்கிறதா என்பதை அடையாளம் கண்டு Weather stripping அல்லது caulk-ஐ பயன்படுத்த வேண்டும். இதனால், அறையை எவ்வளவு திறமையாக குளிர்விக்கிறது என்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
Ceiling அல்லது Portable Fan
கோடை காலத்தில் Ceiling Fan -யை Counter-clock திசையில் சுழல செய்ய வேண்டும். இது, ஏசி-யின் கூலிங் விளைவை மேம்படுத்தும்.
வீடு முழுவதும் குளிரூட்ட ஏசி-யை மட்டுமே நம்பாமல் ஹால் அல்லது பெட்ரூம் போன்ற முக்கிய பகுதிகளை நேரடியாக குளிர்விக்க Portable Fan பயன்படுத்தவும்.
AC Checkup
ஏசி சிறப்பாக செயல்பட்டாலும் கூட வருடத்திற்கு ஒரு முறையாவது service செய்ய வேண்டும். இதன்மூலம் உங்கள் ஏசி சீராகவும் திறமையாகவும் இயங்குவதை உறுதி செய்து கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |