X தளத்தில் வீடியோ கால் பேசலாமா! எலான் மஸ்க் கொடுத்த அப்டேட்
X தளத்தில் விரைவில் வீடியோ கால் பேசலாம் என தலைமை செயல் அதிகாரியான லின்டா யாக்கரினோ கூறியுள்ளார்.
வீடியோ கால் வசதி
X தளத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான பணிகளை எலான் மஸ்க் தொடர்ந்து செய்து வருகிறார். அந்தவகையில், X தளத்தில் விரைவில் வீடியோ கால் பேசுவதற்கான மாற்றங்கள் வரப்போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்விட்டரில் தளமானது மெசேஜிங்கை தவிர்த்து ஹோம் ஃபீட் பிரிவில் தான அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வந்தது. அதனால், மெசேஜிங் வசதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது வீடியோ கால் வசதியும் வரப்போகிறது.
அண்மையில், X தளத்தின் தலைமை செயல் அதிகாரியான லின்டா யாக்கரினோ அளித்த பேட்டியில்,"வீடியோ மற்றும் நீண்ட கட்டுரைகள் தற்போது பிரபலமாகி வருகிறது. அதனால், நீங்கள் உங்களுக்கு பிடித்த கிரியேட்டர்களுக்கு சந்தாதாரர்கள் ஆகிவிடுங்கள். அதில் இருந்து வருவாயை ஈட்டலாம்.
Getty Image
மேலும், உங்களது மொபைல் நம்பரை கொடுக்காமலே வீடியோ கால் வசதியை மேற்கொள்ள முடியும்" என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல், X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே தனது ட்வீட் மூலமாக, வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருப்பது போல, வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதி இடைபெற்றிப்பது போல புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
ring ring pic.twitter.com/1WemXRhFZf
— Andrea Conway (@ehikian) July 7, 2023
ஆடியோ கால் வசதி
தற்போது வரை X தளத்தில் ஆடியோ காலிங் வசதியும் வழங்கப்படாத நிலையில், விரைவில் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதி வழங்கப்பட இருக்கிறது.
வீடியோ காலிங் யு.ஐ.-இல் மைக்ரோபோனில் மியூட்/அன்-மியூட், லவுட் ஸ்பீக்கர், டர்ன் ஆஃப் வீடியோ மற்றும் என்ட் தி கால் ஆகிய அம்சங்கள் அடங்கியுள்ளன. ஆனால், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |