இவரை நிச்சயம் வெற்றி பெறச் வைப்போம்! நான் பயந்து கோவில்பட்டியில் போட்டியிடவில்லை: தினகரன் விளக்கம்
அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் விஜயகாந்தை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி, விஜயகாந்துடன் கூட்டணி வைத்துள்ளது.
அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்துக்கு சென்ற டி.டி.வி.தினகரன், அங்கு விஜயகாந்தை சந்தித்து பேசினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்களின் நலனுக்காகவே அ.ம.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி உருவாகியுள்ளது.
தீயசக்தி தி.மு.க.வையும், துரோக கட்சி அ.தி.மு.க.வையும் வீழ்த்துவதே எங்கள் நோக்கமாகும். கூட்டணிக்காக தே.மு.தி.க.வை தேடிச்சென்று பேசியதில் தவறு ஏதும் இல்லை.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதாவை வெற்றி பெற செய்வோம். தே.மு.தி.க.வுக்காக 42 தொகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்கு பயந்து கோவில்பட்டியில் போட்டியிடுவதாக கூறுவது தவறு என்று கூறினார்.