இளவரசர் ஹரிக்கு எதிராக 20,000 பேர் கையெழுத்திட்டுள்ள கடிதம்: கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது என்ன?
இளவரசர் ஹரிக்கு எதிராக எழுதப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், 20,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளார்கள்.
அந்த கடிதத்தை எழுதியவர், ராஜ குடும்ப நிபுணரும், மேகன் ஹரியைக் குறித்து, Meghan and Harry: The Real Story என்ற புத்தகத்தை எழுதியவருமான Lady Colin Campbell. அந்த கடிதத்தில், இளவரசர் ஹரி மகாராணியாரிடம் தனது பட்டங்களை தற்காலிகமாக அகற்றக் கோரவேண்டும் என்று கூறியுள்ளார் Campbell.
ஹரிக்கு அந்த பட்டங்கள் தேவை இல்லை என்று கூறும் Campbell, அவர் அதையெல்லாம் தாண்டி பெரியவராகிவிட்டார்,அந்த பட்டங்கள் இல்லாமலே அவரால் சமாளிக்கமுடியும் என்கிறார்.
ஹரி தனது பட்டங்களைத் துறக்கும் பட்சத்தில், அவர் செய்யும் எந்த விடயமும் ராஜ குடும்பத்துக்கு எந்த சேதத்தையும் உண்டாக்காது. அத்துடன், அவரும், ராஜ குடும்ப பட்டம் எதுவும் இல்லாமல், ஒரு தனிப்பட்ட குடிமகனான சுதந்திரமாக தனது தனிப்பட்ட செயல்களில் ஈடுபடலாம்.
ஆகவே, ஹரி தனது பட்டங்களைத் துறப்பதால் பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கும், பிரித்தானிய மக்களுக்கும், அவருக்கும் அவப்பெயர் ஏற்படுவதைத் தடுக்கலாம், அவரும் சுதந்திரமாக இருக்கலாம் என்கிறார் Campbell.