விக்ரம் இயக்குனர் லோகேஷுக்கு கமல்ஹாசன் பரிசளித்த சொகுசு கார்! இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விக்ரம் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு, கமல்ஹாசன் பரிசாக கொடுத்த கார் குறித்த வாய்பிளக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ”விக்ரம்” திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது.
இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விக்ரம் திரைப்படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் லெக்சஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மொடல்களில் ஒன்றான இஎஸ் 300எச் மொடலை பரிசாக அளித்துள்ளார்.
லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு கார் இந்தியாவில் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்க்யூசைட் மற்றும் லக்சரி ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும்.
Thank you so much Aandavarey @ikamalhaasan ?? ❤️❤️❤️ pic.twitter.com/h2qZjWKApm
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 7, 2022
இதில், உயர்நிலை தேர்வான லக்சரி-யையே கமல் பரிசாக வழங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. ரூ. 65.60 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும்.
இந்த காரில் 2.5 லிட்டர், டைரக்ட் இன்ஜெக்சன் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், தானாக சார்ஜ் செய்து கொள்ளும் ஹைபிரிட் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், மின் மோட்டார் ஒன்றும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றது.
இவ்விரண்டும் சேர்ந்து காரை 214 குதிரை திறனில் இயங்கச் செய்கின்றன. இதுமட்டுமின்றி ஒரு லிட்டருக்கு 22.6 கிமீ மைலேஜை வழங்கவும் இந்த அம்சம் உதவுகின்றது. 2,487 சிசி 4 சிலிண்டர் இன்-லைன் மோட்டாரே இஎஸ் 300எச் லக்சரி வேரியண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 5,700 ஆர்பிஎம்மில் 131 கிலோவாட் பவரையும், 5,200 ஆர்பிஎம்மில் 221 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதில் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கும் பர்மனென்ட் மேக்னட் மின் மோட்டார் அதிகபட்சமாக 88kW மற்றும் 202 என்எம் திறனை வழங்கும்.
இந்த மின் மோட்டாருக்கான மின்சார சக்தியை வழங்கும் விதமாக 244.8 V பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.
இதோடு இந்த காரில் 360 டிகிரி கேமரா, சாலையை விட்டுப் பார்வையை எடுக்காமல் விண்ட்ஷீல்டிலேயே டிஸ்ப்ளே தெரியும் ஹெட்அப் டிஸ்ப்ளே, 17 ஸ்பீக்கர் சிஸ்டம், டிரைவர் – பயணிகள் என எல்லோருக்கும் சேர்த்து காரைச் சுற்றி 10 காற்றுப்பைகள், (எத்தனை உருண்டாலும் பயணிகளுக்குக் கீறல்கூட விழாதாம்!), பக்கவாட்டிலும் ரொம்பதூரம் வெளிச்சம் பீய்ச்சியடிக்கும் Wide Angle ஹெட்லைட்ஸ், எத்தனை ஈரத்திலும் வழுக்காமல் ஓடும் 19 இன்ச் டயர்கள் கொண்ட VSC (Vehicle Stability Control), வெயில் காலத்தில் முதுகில் வியர்க்காமல் இருக்கும் வென்டிலேட்டட் சீட்கள் என்று ஏகப்பட்ட வசதிகள் இதில் உண்டு.