இந்தியாவில் Lexus கார்களின் விலை ரூ.20 லட்சம் வரை குறைப்பு
இந்தியாவில் Lexus கார்களின் விலை ரூ.20.80 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
Lexus India நிறுவனம், GST 2.0 மாற்றத்திற்கு பிறகு, பிரீமியம் கார்களின் விலையை குறைத்துள்ளது.
இந்த புதிய விலைகள் 2025 செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக இந்த சலுகையை வழங்கும் வகையில், Lexus இந்த விலை மாற்றத்தை அறிவித்துள்ளது.
விலை குறைக்கப்படும் முக்கிய மொடல்கள்
ES 300h - ரூ.1.47 லட்சம் குறைப்பு
NX 350h - ரூ.1.58 லட்சம் குறைப்பு
RX 350h - ரூ.2.10 லட்சம் குறைப்பு
RX 500h - ரூ.2.58 லட்சம் குறைப்பு
LM 350h - ரூ.5.77 லட்சம் குறைப்பு
LX 500d - ரூ.20.80 லட்சம் குறைப்பு (அதிகபட்ச சலுகை)
இந்த விலை மாற்றம் இந்தியாவில் பிரீமியம் வாகனங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.
மேலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சலுகை அறிமுகமாகும் நிலையில், Lexus கார்களை வாங்க விரும்பும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Lexus India GST 2.0 price cut 2025, Lexus LX 500d rs 20.8 lakh discount, Lexus ES 300h new price India, Lexus hybrid SUV price drop, GST 2.0 impact on luxury cars, Lexus festive offers September 2025, Lexus India car price reduction, Hikaru Ikeuchi Lexus India statement, Lexus LM 350h price cut GST, Lexus RX 500h GST discount India