வந்தாச்சு சூட்கேஸ் டிவி! இனி எங்கு சென்றாலும் மடித்து வைத்து எடுத்துட்டு போகலாம்
எல்ஜி நிறுவனம் 27 இன்ச் திரை கொண்ட எங்கு சென்றாலும் எடுத்துக்கொண்டு போகமுடியும் என்கின்ற அளவிற்கு டிவி ஒன்றை அறிமுகம்செய்துள்ளது.
1080பி எல்சிடி திரை கொண்ட இந்த டிவியை முழுவதுமாக பேட்டரி திறனிலேயே இயக்க முடியும்.
இதில் அமைந்துள்ள 20 வாட்ஸ் ஸ்பீக்கர் நமது இசை ரசனையை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.
நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை போலவே இந்த டிவி யையும் நாம் நினைத்த இடத்திற்கெல்லாம் கொண்டு சென்று பார்க்கலாம்.
பேட்டரி திறனிலேயே இந்த டிவி 3 மணி நேரம்இயக்கப்படும் என எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆக வீட்டில் எந்த அறையிலும் எடுத்து சென்றும், சுற்றுலா பயணங்கள் போன்ற இடத்திற்கு எடுத்து சென்றும் டிவி-யை பார்த்து மகிழலாம்.
Dolby Atmos அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு இந்த டிவி வழங்கும். அதேபோல இணையதளத்தை இணைக்கும் ஆப் வசதி, ப்ளூடூத் வசதி, wifi வசதி போன்றவை இந்த டிவியில் உள்ளன என்று அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி டேவிட் பார்க் தெரிவித்தார்.
தற்போது இந்த டிவி யை அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எல்ஜி டிவியின் விலை 999 டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 83,000 ரூபாய் ஆகும்.
இதனுடன் 300 டாலர் அதாவது 25,000 மதிப்பிலான ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தியா உள்பட மற்ற நாடுகளில் இந்த டிவி எப்போது விற்பனைக்கு வரும் என்ற உறுதியான தகவல் இதுவரையிலும் தெரிவிக்கப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |