பிரித்தானியாவில் திருநங்கைகளால் பெண்கள் உரிமை பாதிக்கப்படுகிறதா? போரிஸ் அதிரடி!
பிரித்தானியாவில் பெண்கள் விளையாட்டு போட்டியில் திருநங்கைகள் பங்கேற்க கூடாது என அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் நேற்று(புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகமெங்கும் இருக்கும் LGBT-களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டு வந்த முதன்மை மாநாட்டை பிரித்தானியா கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உயிரியல் ஆண்கள், பெண்கள் விளையாடும் போட்டிகளில் பங்கேற்பதை நான் முறையானதாக கருதவில்லை, இது மிகவும் சர்ச்சைக்குரிய விசயமாக இருக்கலாம் ஆனால் இத்தைகைய நடைமுறை எனக்கு வினோதமாக தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் அல்லது உடை மாற்றும் அறைகள் போன்றவை பெண்களுக்கென பிரத்யேகமானது, இது என்னை சிலருடன் முரண்பட வைக்கலாம் ஆனால் நான் பாலினத்தை மாற்றவும், மாற்ற விருப்பும் நபர்களிடமும் நான் மிக்கவும் அனுதாபம் காட்டவில்லை என்ற அர்த்தமாகாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விளையாட்டுகளில் உள்ளடக்கத்தை சமநிலை படுத்தவும், நியாமற்ற நன்மைகள் விளையாட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் போது திருநங்கைகளின் உரிமைகள் பரபரப்பாக பேசப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அத்துமீறும் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள்...கையும்களவுமாக சிக்கிய CCTV ஆதாரம்!
கடந்த வார இறுதியில் பிரித்தானியாவின் தேசிய ஆம்னியம் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து திருநங்கை எமிலி பிரிட்ஜஸ் நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பிரித்தானியாவில் நடைபெற்ற மற்றொரு சைக்கிள் போட்டியில் திருநங்கைகள் மற்றும் இருமை அல்லாத பங்கேற்ப்பு கொள்ளகையின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.