சுக்குநூறாக நொறுங்கிய நிக்கோலஸ் பூரன் அணி: 52 பந்தில் 102 ரன் விளாசிய 20 வயது வீரர்
MI நியூயார்க் அணிக்கு எதிரான மேஜர் லீக் போட்டியில், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் அதிரடி சதம் விளாசினார்.
சொதப்பிய பூரன்
டல்லாஸில் நடந்த மேஜர் லீக் போட்டியில், MI நியூயார்க் மற்றும் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் மோதின.
Pitched up and away it goes in the stands 🚀
— MI New York (@MINYCricket) July 9, 2026
Our Accenture Shot of the day comes off Ryan's bat 💪#MLC #OneFamily #MINYvSFU | @Accenture pic.twitter.com/t8ENrRlew9
முதலில் ஆடிய MI நியூயார்க் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்தது.
ரியான் ரிக்கெல்டன் 21 பந்துகளில் 35 ஓட்டங்களும், சன்னி பட்டேல் 23 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தனர்.
அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) 24 பந்துகளில் 19 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். மேத்யூ ஷார்ட் 3 விக்கெட்டுகளும், ஹாரிஸ் ராஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ருத்ரதாண்டவம்
பின்னர் ஆடிய சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியில் ஃபின் ஆலன் 20 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ருத்ரதாண்டவம் ஆடினார்.
A moment to remember 🏆 Lhuan-dre Pretorius gets his maiden T20 century with 102* (52) for the San Francisco Unicorns 🦄 pic.twitter.com/8xC3h2EuiM
— Cognizant Major League Cricket (@MLCricket) July 9, 2026
அவரது அதிரடி ஆட்டத்தில் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் 15.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 52 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |