26 பந்தில் 66 ரன்: 15 ஓவரிலேயே 193 ஓட்டங்கள் எடுத்து வெற்றி..20 வயது வீரரின் ருத்ரதாண்டவம்
மேஜர் லீக் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை வீழ்த்தியது.
அன்ரீஸ் கோஸ் 83
ஓக்லாந்தில் நடந்த மேஜர் லீக் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதின.
After a few unfortunate dropped catches, Haris Rauf took things into his own hands (literally). He dismissed Washington Freedom Captain Steve Smith with a blistery 88mph ball—a perfect #RemitlySpeedyDelivery ⚪️💨 pic.twitter.com/PqiUFEXRHr
— Cognizant Major League Cricket (@MLCricket) June 29, 2026
முதலில் ஆடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் குவித்தது.
அன்ரீஸ் கோஸ் 83 (50) ஓட்டங்களும், மிட்செல் ஓவன் 39 (20) ஓட்டங்களும், நிகில் சௌத்ரி 32 (19) ஓட்டங்களும் விளாசினர்.
லுஹான்-ட்ரே பிரிட்டோரியஸ்
பின்னர் களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியில் ஃபின் ஆலன் 18 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
A rapid half-century for Lhuan-dre Pretorius at 66 (26) 🥵⏩ pic.twitter.com/ZUYFEClLji
— Cognizant Major League Cricket (@MLCricket) June 29, 2026
மறுபுறம் சிக்ஸர்களை பறக்கவிட்ட லுஹான்-ட்ரே பிரிட்டோரியஸ் (Lhuan-dre Pretorius) 26 பந்துகளில் 66 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.
ஆரோன் ஹார்டி 42 (22) ஓட்டங்களும், அணித்தலைவர் மேத்யூ ஷார்ட் 34 ஓட்டங்களும் விளாச, சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் 15.1 ஓவர்களில் 193 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |