அறிமுக டெஸ்டில் 160 பந்தில் 153 ஓட்டங்கள் விளாசிய வீரர்! 19 வயதில் இமாலய சாதனை
புலவாயோ டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் லூஹான் பிரிட்டோரியஸ் 153 ஓட்டங்கள் விளாசினார்.
லூஹான் பிரிட்டோரியஸ்
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோ நகரில் நடந்து வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தை தொடங்கியது. 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டை இழந்த நிலையில் டெவல்ட் பிரேவிஸ் 51 (41) ஓட்டங்கள் விளாசினார்.
மறுமுனையில் 19 வயது வீரரான லூஹான் பிரிட்டோரியஸ் (Lhuan-dre Pretorius) அதிரடியாக சதம் விளாசினார்.
153 ஓட்டங்கள்
அதன் பின்னரும் அதிரடி காட்டிய அவர் 160 பந்துகளில் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 153 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தனது அறிமுக டெஸ்டிலேயே சதம் விளாசிய இளம் வீரர் எனும் இமாலய சாதனையை பிரிட்டோரியஸ் படைத்தார்.
முன்னதாக, ஜெகியூஸ் ருடோல்ப் 21 வயதில் அறிமுக டெஸ்டில் சதம் அடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |