எல்ஐசி முகவர்களின் மாத வருவாய் எவ்வளவு? எந்த மாநிலத்தில் அதிகமாக சம்பாதிக்கிறார்கள்
சுமார் 67 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் மொத்தம் 13,90,920 முகவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
எல்ஐசி முகவர்கள்
இவர்களில் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த எல்ஐசி முகவர்களே நாட்டிலேயே மிகவும் குறைவான வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது. சராசரியாக மாதம் 10,328 ரூபாய் இவர்கள் வருவாய் ஈட்டுகின்றனர்.
ஆனால் அந்தமான் & நிக்கோபார் தீவுகளை சேர்ந்த முகவர்கள் சராசரியாக ஒரு மாதம் ரூ 20,446 வருவாய் ஈட்டுகின்றனர். அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் வெறும் 273 முகவர்களே பணியாற்றுகின்றனர்.
ஆனால் இமாச்சல பிரதேசத்தில் 12,731 முகவர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் மொத்தம் 13,90,920 முகவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சராசரி மாத வருவாய்
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 1.84 லட்சம் முகவர்கள் செயல்படுகின்றனர். இவர்களின் மாத வருவாய் என்பது சராசரியாக ரூ 11,887 என்றே கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாகாணத்தில் 1.61 லட்சம் முகவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் சராசரி வருவாய் என்பது ரூ 14,931 என தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 119,975 முகவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் சராசரி மாத வருவாய் ரூ 13,512. தமிழ்நாட்டில் 87,347 முகவர்கள் செயல்படுகின்றனர். இவர்களின் சராசரி மாத வருவாய் ரூ 13,444. கர்நாடகத்தில் 81,674 முகவர்கள் உள்ளனர். இவர்களின் சராசரி மாத வருவாய் ரூ 13,265.
ராஜஸ்தானில் 75,310 முகவர்கள் செயல்படுகின்றனர். இவர்களின் மாத வருவாய் ரூ 13,960. மத்தியபிரதேசத்தில் 63,779 முகவர்கள் உள்ளனர். இவர்களின் சராசரி மாத வருவாய் ரூ 11,647. டெல்லியில் 40,469 முகவர்கள் செயல்படுகின்றனர். இவர்களின் சராசரி மாத வருவாய் ரூ 15,169 என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |