LICல் ஒருமுறை முதலீடு.., வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம்
ஓய்வுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை கிடைக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு LICயின் ஜீவன் அக்ஷய்-VII திட்டம்(Jeevan Akshay-VII) உதவியாக இருக்கும்.
LICல் ஒருமுறை முதலீடு
LICயின் உடனடி வருமானத் திட்டமான இதில் ஒருமுறை மட்டும் முதலீடு செய்தால், தேர்வு செய்யும் திட்டத்திற்கு ஏற்ப தொடர்ந்து ஓய்வூதியம் வரும்.
இதில் முதலீடு செய்த பிறகு, தேர்வு செய்யும் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். மேலும், ஓய்வூதியத் தொகை தொடக்கத்திலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
உதாரணமாக, 60 வயதில் ரூ.10 லட்சத்தை விருப்பத் தேர்வு A-வில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.86,100 ஓய்வூதியம் கிடைக்கும்.
அதாவது மாதம் ரூ.7,175 கிடைக்கும். விருப்பத் தேர்வு F-ஐ தேர்வு செய்தால், ஆண்டுக்கு ரூ.64,000, அதாவது மாதம் ரூ.5,333 பெறலாம்.
வருமான வரி வரம்பின் அடிப்படையில், LICயிலிருந்து பெறப்படும் வருடாந்திரத் தொகை அல்லது ஓய்வூதியத்தின் மீது வரி விதிக்கப்படலாம்.
உங்கள் மறைவுக்கு பிறகும் உங்கள் வாழ்க்கைத் துணை தொடர்ந்து ஓய்வூதியம் பெற விரும்பினால், கூட்டு வாழ்நாள் (joint life) என்ற விருப்பத் தேர்வு உள்ளது.

இதில், இருவரின் வயது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகை தீர்மானிக்கப்படுகிறது.
LICயின் விருப்பத் தேர்வு H மற்றும் I ஆகியவற்றில், இரண்டாவது நபர் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கான வசதி உள்ளது.
அதேவேளையில், விருப்பத் தேர்வு Jல், கடைசியாக உள்ள நபர் மறைந்த பிறகு முதலீட்டு தொகையை திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |