LIC ஜீவன் தருண் பாலிசி திட்டம்: என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
எல்ஐசியின் ஜீவன் தருண் பாலிசி திட்டம் மற்றும் அதன் பலன்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
எல்ஐசியின் ஜீவன் தருண் பாலிசி
எல்ஐசியின் ஜீவன் தருண் பாலிசி திட்டம் என்பது குழந்தைகளுக்கான இணைக்கப்படாத, தனிநபர், ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இந்த திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அம்சங்களின் கலவையாக உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 20 முதல் 24 வயது வரையிலான வருடாந்திர சர்வைவல் பெனிபிட் மற்றும் 25 வயதில் முதிர்வுப் பலன்கள் ஆகியவை கிடைக்கின்றன. வளர்ந்து வரும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் உள்ளது.
இந்த பாலிசி திட்டத்திற்கு குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 75,000-யும், அதிகபட்ச தொகைக்கு வரம்பு ஏதும் இல்லை.
இந்த திட்டத்திற்கு வயதை பொறுத்தவரை பிறந்து 90 நாள்கள் ஆன குழந்தைக்கு முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 12 வயது வரம்பு 12 ஆண்டுகள் ஆகும். மேலும், 25 ஆண்டுகளில் இந்த திட்டம் முதிர்ச்சி பெறும். பிரிமீயம் 20 ஆண்டுகள் ஆகும்.
4 விருப்பங்கள்
* இந்த பாலிசியில் விருப்பம் 1 இன் கீழ், பாலிசி வைத்திருப்பவர் முதிர்வுப் பலனாக 100 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட தொகையைப் பெறுவார்கள். ஆனால், உயிர்வாழும் பலன் ஏதும் இருக்காது.
* விருப்பம் 2 இன் கீழ், 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 5% காப்பீட்டுத் தொகையை பாலிசிதாரர் பெறுவார். மேலும், உறுதியளிக்கப்பட்ட தொகையில் 75% முதிர்வு நன்மை வழங்கப்படும்.
*விருப்பம் 3 இன் கீழ், 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10% காப்பீட்டுத் தொகையை பாலிசிதாரர் பெறுவார். மேலும், உறுதியளிக்கப்பட்ட தொகையில் 50% முதிர்வு நன்மை வழங்கப்படும்.
*விருப்பம் 4 இன் கீழ், 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 15% காப்பீட்டுத் தொகையை பாலிசிதாரர் பெறுவார். மேலும், உறுதியளிக்கப்பட்ட தொகையில் 25% முதிர்வு நன்மை வழங்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |