தினமும் ரூ.151 முதலீடு செய்து.., இறுதியில் ரூ.31 லட்சம் கிடைக்கும் LIC பாலிசி தெரியுமா?
வெறும் ரூ.151 முதலீடு செய்து ரூ.31 லட்சம் கிடைக்கும் LIC பாலிசியை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எல்ஐசி கன்யாடன் பாலிசி (LIC Kanyadan Policy)
எல்ஐசி கன்யாடன் பாலிசி திட்டமானது பலரது கனவையும் நிறைவேற்றி வருகிறது. இது ஒரு தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும்.
இந்த திட்டமானது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் இரட்டைப் பலனை வழங்குகிறது. அதாவது, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான நேரத்தில் செலவினங்களை நிர்வகிப்பதில் பெற்றோருக்கு உதவுகிறது.
இந்த எல்ஐசி கன்யாடன் பாலிசியை (LIC Kanyadan Policy) ஒருவர் எடுக்க விரும்பினால் அவர் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதோடு, குழந்தைக்கு குறைந்தபட்சம் 1 வயது இருக்க வேண்டும்.
இந்த பாலிசியின் கால அளவு 25 ஆண்டுகள் ஆகும். இதில் 22 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும், மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த தேவையில்லை.
என்னென்ன ஆவணங்கள்?
* பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
* பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் அடையாளச் சான்று (PAN Card, Voter ID Card போன்ற ஆவணங்கள்)
இந்த பாலிசியில் நாம் தினமும் ரூ.151 செலுத்த வேண்டும். அதாவது மாதம்தோறும் ரூ.4,530 டெபாசிட் செய்ய வேண்டும்.
ஒருவரின் சம்பளம் ரூ.15,000 என்றால் அவர் தனது மகளின் பெயரில் கன்யாதன் பாலிசி எடுக்கலாம் இதில் அவர் 22 வருடங்களுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். பின்னர், 25 ஆண்டுகள் முடிவில் அவருக்கு ரூ.31 லட்சம் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |