மாதம் ரூ.11,880 வருமானம்: LIC-யின் சூப்பரான புதிய திட்டம் பற்றி தெரியுமா?
LIC ஸ்மார்ட் பென்சன் திட்டம் குறித்தும், ஒரே முதலீட்டில் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுவது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதிய பென்சன் திட்டம்
இந்தியாவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக இருக்கும் LIC(Life Insurance Corporation of India) ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ப பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
அதில் சில திட்டங்கள் ஓய்விற்கு பின்பு குடும்ப நிதியை சீராக வைப்பதற்கு நிரந்தரமான வருமானத்தை கொடுக்கும் விதமாக புதிய பென்சன் திட்டம் அறிமுகமாகியுள்ளது.
அதாவது ஒரே முறை முதலீடு செய்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் மாதா மாதம் பென்சனை பெற முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகவே இருக்கின்றது.
இந்த திட்டம் ஜீரோ ரிஸ்க் பென்சன் திட்டம் என்று அழைக்கப்படும், இந்த திட்டத்தில் வாழ்நாள் முழுவதும் எந்தவொரு கட்டமைப்பு மாற்றம் இல்லாமல் தொகையை பெற முடியும்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்?
இந்த பென்சன் திட்டத்தில் குறைந்தபட்ட தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து செலுத்தலாம். அதிகப்பட்சம் எந்தவொரு வரம்பு கிடையாது என்பதால் மிகப்பெரிய தொகையை கூட செலுத்தலாம்.
கணக்கு தொடங்குவது, தனி நபர், கூட்டு கணக்காக தொடங்கலாம். மேலும் ஓய்வூதியத்தினை மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை, அரை ஆண்டுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை என தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பெற்றுக் கொள்ள முடியும்.

பாலிசிதாரர் இறந்த பின்பு முதலீடு செய்த பணத்தினை குடும்பத்தினர் பெறும் வகையிலும் சில விருப்பங்கள் வழங்கப்படுகின்றது. ஆகவே ஓய்வு பெற்ற பின்பு வரும் மிகப்பெரிய தொகையை இதில் பாதுகாப்பாக வைப்பதுடன், இந்த திட்டம் வாழ்நாள் முழுவதும் வருமானத்திற்கு குறைவு இல்லாமலும் இருக்கும்.
ரூ.20 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் மாதந்தோறும் ரூ.11,880 ரூபாய் பெறலாம். அதாவது ரூபாய் 20 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டிற்கு 1,36,000 வருமானம் கிடைக்கின்றது. இதனை நமது விருப்பத்திற்கு ஏற்ப காலக்கட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
குறித்த திட்டமானது வயது மற்றும் தேர்வு செய்யப்படும் ஓய்வூதிய திட்டத்தினைக் குறித்து சற்று மாறுபடும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |