பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள் வந்தாலும் இதற்கெல்லாம் விலக்கு! கசிந்த முக்கிய தகவல்
பிரித்தானியாவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் வந்தாலும் முக்கியமான நிகழ்வுகள் ஏதும் பாதிக்கப்படாது என அரசாங்கம் தரப்பிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை அறிமுகப்பத்தினாலும் திருமணங்கள், இறுதிச்சடங்குகள் மற்றும் பிறப்புகள் போன்று முக்கிய நிகழ்வுகள் பாதிக்கப்படாது என கூறப்படுகிறது.
முன்னர் பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது திருமணங்கள், இறுதிச்சடங்குகள் மற்றும் பிறப்புகள் போன்ற முக்கிய நிகழ்வுகள் பெரியளவில் பாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இனி கூடுதலாக கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டால், இதேபோன்ற இடையூறு தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
அதிகாரிகள், பிரித்தானியா அரசாங்கத்திற்கு பல திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது,ஆனால் ஒவ்வொன்றிலும் முக்கிய நிகழ்வுகளுக்கான விலக்குகள் உள்ளதாம்.
அதேபோல், பெண்களை பிரசவிக்கும்படி கட்டாயப்படுத்தவோ அல்லது அவர்களின் துணையின்றி ஸ்கேன் எடுக்கவோ கூடாது என்று மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.