ஊழியரின் உயிரை காப்பாற்ற தானே விமானம் ஓட்ட முன்வந்த Ratan Tata., இன்று அவருக்கு பிறந்தநாள்
இந்தியாவின் மிகப்பாரிய தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் பிறந்தநாள் இன்று.
28 டிசம்பர் 1937ல் பிறந்த ரத்தன் டாடா (Ratan Tata), 1991 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார். இந்த காலகட்டத்தில், அவர் டாடா குழுமத்தை மிக உயரத்திற்கு கொண்டு சென்றார்.
ரத்தன் டாடா ஒரு நல்ல தொழிலதிபர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. தன்னுடன் பணிபுரிபவர்களை மிகவும் கவனித்துக்கொள்கிறார். அவர் எப்போதும் தனது ஊழியர்களுக்கு ஆதரவாக நிற்பதாக அறியப்படுகிறது. அந்த ஊழியர் நிறுவனத்தில் எந்த பதவியில் இருக்கிறார் என்பது ஆவருக்கு முக்கியமல்ல.
ஊழியரின் உயிரை காப்பாற்ற தானே விமானம் ஓட்ட முன்வந்த ரத்தன் டாடா
ஒரு பணியாளரின் உயிரைக் காப்பாற்ற ரத்தன் டாடா ஒருமுறை தானே விமானம் ஓட்ட ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 2004ல் நடந்தது.
புனேவில் உள்ள Tata Motors நிறுவனத்தின் எம்டி Prakash M Telangக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை உடனடியாக மும்பைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அன்று ஞாயிற்றுக்கிழமை, மருத்துவர்களால் ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதைக் கேள்விப்பட்ட ரத்தன் டாடா நிறுவனத்தின் விமானத்தை தானே ஓட்ட முடிவு செய்தார்.
அவர் ஒரு பயிற்சி பெற்ற விமானியாக இருந்தாலும், அவர் எளிதாக மற்றவர்களிடம் அந்த பணியை ஒப்படைத்திருக்கலாம், ஆனால் தெலாங்கிற்கு உடனடி மருத்துவ கவனிப்பு கிடைப்பதை உறுதி செய்ய விரும்பினார். டாடா நிறுவனத்திற்கு பைலட் உரிமம் உள்ளது.
ஆனால் இதற்கிடையில் ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு பிரகாஷ் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றிய பிரகாஷ் 2012ல் ஓய்வு பெற்றார்.
சச்சின் டெண்டுல்கர் நம்பி ரூ. 5 கோடி முதலீடு செய்த நிறுவனம்., பிவி சிந்து, சாய்னா நேவால் உட்பட பலர் லாபம்
பயிற்சி பெற்ற விமானி
ரத்தன் டாடா ஒரு பயிற்சி பெற்ற விமானி மற்றும் விமானம் ஓட்ட உரிமம் பெற்றவர். அவரிடம் Dassault Falcon 2000 Private jet விமானமும் உள்ளது, அதன் மதிப்பு சுமார் ரூ.150 கோடி என கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் போர் விமானத்தின் காக்பிட்டில் காணப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த புகைப்படம் 2011-ஆம் ஆண்டு பெங்களூரு ஏர்ஷோவில் Boeingன் F-18 Super Hornet விமானத்தில் ரத்தன் டாடா பறந்தபோது எடுக்கப்பட்டது. பிப்ரவரி 28, 2019 அன்று தனது 82வது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் இதைப் பகிர்ந்துள்ளார்.
ரத்தன் டாடா 2007-ம் ஆண்டு அமெரிக்க போர் விமானமான F-16ல் பறந்தார். 69 வயதில் அமெரிக்க விமானத்தை ஓட்டிய இந்தியக் குடிமகன்களில் மிகவும் வயதானவர் இவர் தான்.
ரத்தன் டாடாவுக்கு விமானம் ஓட்டும் ஆர்வம் அவரது மரபிலேயே உள்ளது என்றுசொல்லலாம். ஏனெனில், அவருடைய வழிகாட்டியான J. R. D. Tataதான் இந்தியாவின் முதல் உரிமம் பெற்ற விமானி ஆவார்.
ஜே.ஆர்.டி.டாடா முதல் முறையாக கராச்சியிலிருந்து பம்பாய்க்கு விமானத்தில் பறந்தார். இவர்தான் Tata Airlines நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அதன் பெயர் Air India ஆனது மற்றும் அது தேசியமயமாக்கப்பட்டது. சமீபத்தில் ஏர் இந்தியா மீண்டும் டாடா குழுமத்திற்கு திரும்பியது.
பணிநீக்கங்களுக்கு எதிரான போராட்டம்
கொரோனா காலத்தில், நிறுவனங்கள் வெகுஜன பணிநீக்கங்களைச் செய்தபோது, அதனை ரத்தன் டாடா கடுமையாக எதிர்த்தார்.
கொரோனாவின் கடினமான காலங்களில், நிறுவனங்களுக்கு மக்கள் மீது பொறுப்பு உள்ளது என்று அவர் கூறியிருந்தார். உங்களுக்காக உழைத்தவர்களை கைவிட்டு விட்டீர்கள். தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்கள் நீண்ட நேரம் வேலை செய்து சிறப்பாக செயல்படும் ஊழியர்களிடம் உணர்திறன் கொண்டவர்களாக இருப்பது முக்கியம். தொற்றுநோய்களின் போது உங்கள் ஊழியர்களை இப்படித்தான் நடத்துகிறீர்கள், இதுதான் உங்கள் ஒழுக்கமா? என்று கேள்வி எழுப்பினார்.
பாரத ரத்னா வழங்க கோரிக்கை
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ள ஒரே தொழிலதிபர் ரத்தன் டாடா மட்டுமே.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி #BharatRatnaForRatanTata என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இருப்பினும், ரத்தன் டாடா இந்த பிரச்சாரத்தை நிறுத்துமாறு மக்களைக் கோரினார், மேலும் ஒரு இந்தியராக இருப்பது தன்னை அதிர்ஷ்டசாலி என்று கருதுவதாகக் கூறினார்.
ரத்தன் டாடாவுக்கு 2000-ஆம் ஆண்டு பத்ம பூஷன் மற்றும் 2008 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Ratan Tata, Padma Vibhushan, Padma Bhushan, Ratan Tata Pilot license, Ratan TataBirthday