30,000 உயிர்களை காப்பாற்றலாம்! பிரித்தானியாவில் புதுவித ஊசியை பரிந்துரைக்கும் NHS
பிரித்தானியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு கொலஸ்ட்ரால் எதிர்ப்பு மருந்தை செலுத்திக்கொள்ளும்படி NHS பரிந்துரை செய்கிறது.
இந்த ஊசியை வருடத்திற்கு 2 முறை செலுத்துவதால், ஒரு தசாப்தத்திற்குள் சுமார் 30,000 உயிர்களை காப்பாற்ற முடியும் என என்ஹெச்எஸ் இங்கிலாந்து கூறுகிறது.
இது பொதுவாக ஒரு டோஸுக்கு 2,000 பவுண்டுகள் செலவாகும். ஆனால் இந்த மருந்தை தயாரிக்கும் நோவார்டிஸ் (Novartis) நிறுவனம் புதிதாக தள்ளுபடி அளிக்க ஒப்புக்கொண்டது.
இது ஒரு விலையுயர்ந்த மருந்தாக இருக்கலாம், அனால் இதனை செலுத்திக்கொள்வது வாழ்க்கையை மாற்றக்கூடியதாக இருக்கும் என NHS கூறுகிறது.
ஏற்கனவே பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்பட்ட மற்றும் பிற கொழுப்பைக் குறைக்கும் சிகிச்சைகளுக்கு பதிலளிக்காத நபர்களுக்கு இந்த மருந்து ஒரு விருப்பமாக பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் இந்த மருந்து உயிருக்கு ஆபத்தான இருதய நிகழ்வுகளின் அபாயத்தைக் குறைக்க இது உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஆய்வுகளிலிருந்து இதற்கு நீண்டகால ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், தற்போதுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பரிந்துரைப்பது மதிப்புக்குரியது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ஸ்காட்லாந்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இப்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளுக்கு இப்போது வழங்கப்படவுள்ளது.
இங்கிலாந்தில் ஐந்தில் இரண்டு பேருக்கு மேல் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதாக கருதப்படுகிறது மற்றும் சுமார் 6.5 மில்லியன் பெரியவர்கள் அதை குறைக்க உதவுவதற்காக Statins எனப்படும் மருந்துகளை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு தினசரி மாத்திரை எடுத்துக்கொள்வதை ஒப்பிடுகையில், வருடத்திற்கு இரண்டு முறை எடுத்துக்கொள்வது சுமையாக இருக்காது என கூறப்படுகிறது.