இந்த 5 எளிய விஷயத்தை செய்தால் போதும்! வாழ்நாள் முழுக்க சர்க்கரை நோய் நம்ம கிட்டயே வராது
ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டும் அதுவும் குறைந்த எண்ணிக்கையில் தான் சர்க்கரை நோய் தாக்கம் இருந்தது. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி இளம் வயதினரையும் சர்க்கரை நோய் அதிகளவு தாக்குகிறது.
நீரிழிவு என்பது ஒரு மெட்டாபாலிசநோய். நமது உடல் போதுமான இன்சுலினை சுரக்க முடியாமல் சர்க்கரையானது இரத்தத்தில் கலப்பதால் அதன் அளவு அதிகரித்து வருவது தான் இந்த நீரிழிவு.
வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கான சில வாழ்க்கை முறைகளை காண்போம்.
உடல் எடை மற்றும் சரியான BMI
நீரிழிவு மற்றும் பிற நோய்களிலிருந்து தப்பிக்க ஓரே வழி உங்கள் உடல் எடையை சரியான அளவில் பேண வேண்டும். நீங்கள் ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்து வந்தால் உங்கள் உடல் எடை குறியீட்டு எண்ணையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் நீரிழிவு வருவதை 70% வரை தடுக்கலாம்.
சாலட்
காய்கறிகள் மற்றும் கீரைகள், பழங்கள் அடங்கிய சாலட் உங்களுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். இதில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், கீரை மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எடுத்து கொள்ளுங்கள். மதிய உணவிற்கு முன் அல்லது இரவு உணவில் முன் எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் மேலும் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்க்க மறந்து விடாதீர்கள். வினிகர் சேர்ப்பதால் உணவிலிருந்து உறிஞ்சப்படும் சர்க்கரை அளவு குறையும்.
நடக்க வேண்டும்
நீங்கள் நீரிழிவிலிருந்து தப்பிக்க நடைபயிற்சி மேற்கொள்வது உங்களுக்கு சிறந்த பலன் அளிக்கும். எனவே தினசரி 40 நிமிடங்கள் நடப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.
முழுதானிய உணவுகள்
உணவில் முழுதானிய உணவுகளான ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, சிறு தானியங்கள் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். உங்கள் காலை உணவிற்கு இது சிறந்ததாக இருக்கும். ந்த முழு தானியங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. இந்த நார்ச்சத்துகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து நீரிழிவு வருவதை தடுக்கிறது.
மன அழுத்தம் வேண்டாம்
மன அழுத்தம் தான் எல்லா விதமான நோய்க்கும் காரணமாகும். சின்ன தலைவலியிலிருந்து ஆளைக் கொல்லும் புற்றுநோய் வரை அனைத்தும் இதனால் தான் ஏற்படுகிறது. எனவே உங்கள் மன அழுத்தம் உங்களுக்கு சர்க்கரை நோயையும் கொண்டு வந்து விடும்.