தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்?
மிகச் சிறிய அளவில் கடுகுப்போல் இருக்கும் வெந்தயத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இந்தியாவில் வெந்தயம் பயன்படுத்தாத மக்களே கிடையாது.
வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம் உட்பட பல சத்துக்களை கொண்டுள்ளது. மேலும், டையோஸ்ஜெனின் என்ற சேர்மமும் இருக்கிறது. இதனால், இரவில் சிறிதளவு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அதை தினமும் குடித்து வந்தால் பல நன்மைகளை நாம் பெறலாம்.
சரி.... வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை குடித்தால் எவ்வளவுன் நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம் -
செரிமானத்திற்கு
தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வெந்தயத்தில் உள்ள ஆன்டாசிட்கள் செரிமான பிரச்சனைகளை தீர்த்து விடும்.
உடல் எடை குறைய
தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு நீங்கும். உடல் எடையும் குறையும்.
இருதயத்திற்கு
தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அதில் உள்ள வேதிப்பொருள் இருதய நோய்யை தடுக்கும். வெந்தயத்தில் பொட்டாசியம் இருப்பதால் நம் உடலில் உள்ள இரத்தத்தையும், இருதய துடிப்பும் கட்டுக்குள் வைக்கும்.
மாதவிடாய்
தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உடல் வெப்பத்தை தணித்து, வயிற்று வலியையும் குறைக்கும்.
தலை முடிக்கு
தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், முடி கொட்டுதல் குறைந்து தலைமுடி செழித்து வளர உதவி செய்யும்.
தாய்ப்பால்
தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலோ, அல்லது பாலில் வெந்தயத்தை போட்டு நன்றாக காய்ச்சி தினமும் குடித்து வந்தாலோ தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
சர்க்கரை நோய்க்கு
தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுத்துவிடும். மேலும், வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை அதிகரிப்பதை தடுக்கும்.
மலச்சிக்கல்
தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். மேலும் வயிற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.
தொண்டைப் புண்
தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிறு மற்றும் தொண்டை புண்களை குணமாக்கும். மேலும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |