கோதுமையா? அரிசியா? ; சாதம் அதிகம் சாப்பிட்டால் ஆபத்து வருமா?
இந்தியாவில் அரிசை கொண்டு செய்யப்படும் பிரதான உணவுகளை மக்கள் சாப்பிடுகின்றன. தென்னிந்தியாவில் 'வெள்ளை அரிசி' தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், அரிசியில் அதிகப்படியான மாவுச்சத்து இருப்பதால் உடல் எடையை கூட்டுகிறது என்பதும் உண்மைதான்.
ஆனால், அதை உணவிலிருந்து முற்றிலுமாக தவிர்க்கலாமா என்பது பற்றி பார்ப்போம் -
1. பொதுவாக அரிசி மனித உடலுக்கு ஆற்றலை கொடுக்கும். அதில் உள்ள கார்போஹைட்ரேட் எளிதில் ஜீரணமாகிவிடும்.
2. செரிமான பிரச்சினை இருப்பவர்கள் தாராளமாக அரிசியால் செய்யப்படும் உணவுகளை சாப்பிடலாம்.
3. அரிசி நல்ல ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.
4. PCOD, IBD சிக்கல்கள் இருப்பவர்கள் கூட அரிசியை சாப்பிடலாம்.
5. அரிசி சாதத்தில், காய்கறிகள், புரதம் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் அரிசி அதிகளவில் சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.
6. குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்கள் வெள்ளை அரிசியை சாப்பிடலாம். மேலும், இவர்கள் சிவப்பு அரிசி சாதம், கோதுமையை தவிர்ப்பது நல்லது.
7. அரிசியால் செய்யப்பட்ட உணவுகளையும் அதிகமாக சாப்பிடுவதை முதலில் குறைத்துக் கொள்ளுங்கள். அளவான அரிசி சாதம் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் உங்களை தண்டாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |