காணவில்லை என புகார் அளிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை ப்ரீசருக்குள் சடலமாக மீட்பு
அவுஸ்திரேலியாவில் பச்சிளம் குழந்தை ஒன்று காணவில்லை என புகார் அளிக்கப்பட்ட நிலையில், ப்ரீசருக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் 40 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாண எல்லையில் அமைந்துள்ள Corowa நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பொலிசார் அதிரடி சோதனை முன்னெடுத்தனர்.
பிறந்து 3 மாதங்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று காணவில்லை என பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொலிசார் முன்னெடுத்த சோதனையிலேயே பச்சிளம் குழந்தை ப்ரீசருக்குள் சடலமாக கண்டெடுத்துள்ளனர்.
சம்பவத்தின் போது அந்த குடியிருப்பில் இருந்த 40 வயது பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் விசாரணைக்கு பின்னர் விடுவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் பொலிசார் குறித்த குடியிருப்பில் சோதனை முன்னெடுத்துள்ளனர்.
குழந்தையின் மரணம் தொடர்பில் உடற்கூராய்வுக்கு பின்னரே தெரியவரும் எனவும், விசாரணை முன்னெடுத்து வருவதால் மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.