வெந்நீரில் குளிப்பது இதமாக இருக்கும் தான்! அதனால் ஏற்படும் தீமைகளை தெரிஞ்சிக்கோங்க
பச்சை தண்ணீர் வெளிப்புற கால்களில் படும் போது, சருமத்தின் மேற்பரப்பில் ரத்த ஓட்டம் உடனடியாக கட்டுப்படுத்தப்படுகிறது.
வெந்நீர் குளியல் உண்மையில் தோல் துளைகளை திறந்து அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்றுவதை எளிதாக்குகிறது.
ஒரு சிலர் கோடையில் கூட மிதமான சூடு நீரில் குளிக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதே போல ஒரு சிலருக்கு சீசன் மாறினாலும் பச்சை தண்ணீரில் குளிப்பது தான் திருப்தியை கொடுக்கும்.
பச்சை தண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்
ஆராய்ச்சியின் படி, குளிர்ந்த நீர் மீளுருவாக்கம் செய்யும் பண்புகளை (regenerative properties) கொண்டுள்ளது. பரபரப்பான வேலை நாள் அல்லது கடின பயிற்சிகளுக்கு பிறகு இது தசைகளை ரிலாக்ஸ் செய்ய மற்றும் தசை ரீஜெனரேஷனை அதிகரிக்கவும் உதவும்.
pinkvilla
பச்சை தண்ணீர் வெளிப்புற கால்களில் படும் போது, சருமத்தின் மேற்பரப்பில் ரத்த ஓட்டம் உடனடியாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் வெப்பமாக இருந்தால் உடல் வெப்பநிலை சட்டென்று குறைகிறது.
நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது குளிர், காய்ச்சல் அல்லது பிற உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் போது பச்சை தண்ணீரில் குளிப்பது நல்ல விடயமாக இருக்காது. குளிர்ந்த நீர் குளியல் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்த கூடும்.
வெந்நீர் குளியல் நன்மைகள் மற்றும் தீமைகள்
நோய்வாய்ப்பட்டிருக்கும் சமயத்தில் வெந்நீரில் குளிப்பது ஒரு மருத்துவ முறையாக மாறுகிறது. குளிர் மற்றும் இருமல் அறிகுறிகளைப் போக்க இது ஒரு இயற்கை தீர்வாகவும் கருதப்படுகிறது.
வெந்நீர் குளியல் உண்மையில் தோல் துளைகளை திறந்து அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்றுவதை எளிதாக்குகிறது.
பச்சை தண்ணீரில் குளிப்பதுடன் ஒப்பிடும்போது வெந்நீரில் குளிப்பது அதிக தீமைகள் உள்ளன. அடிக்கடி வெந்நீரில் குளிப்பது சரும வறட்சி, எரிச்சல் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
அதே போல வெந்நீர் குளியல் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என கூறப்படுகிறது.
healthline