ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு இவை தான் காரணம்! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
women
amenorrhoea
irregular periods
By Kishanthini
பொதுவாக இன்றைக்கு பல பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முறையற்ற மாதவிடாய் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. கர்ப்பப்பையில் அல்லது சினைப்பையில் நீர்க்கட்டி ஏற்பட்டு இருந்தால், ஹார்மோனின் சமநிலையின்மை இருந்தால் முறையற்ற மாதவிடாய் ஏற்படும்.
ஆனால் பல வாழ்க்கை முறை காரணிகளுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளன, அவை ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
அந்தவகையில் ஹார்மோன் பிரச்சினை, உணவு தவிர வேறு என்ன பழக்கமெல்லாம் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு காரணம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- மன அழுத்தம் இது உங்கள் ஹார்மோன்களை பல வழிகளில் அழிக்கக்கூடும்! நீங்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பொழுது, உங்கள் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. உங்கள் மன அழுத்த பிரச்சனை காரணமாக தூக்கமின்மை, முகப்பரு போன்றவை மட்டுமல்லாது மாதவிடாய் பிரச்சனையும் ஏற்படும்.
-
அதிகப்படியான உடற்பயிற்சி நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் செய்ய வேண்டியதை விட அதிகமாக நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது, உங்கள் ஹார்மோன்கள் மாறுபாடு அடையும்.அது ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களை ஏற்படுத்துகிறது.
-
புகைபிடிப்பதும் மது அருந்துதலும் நீங்கள் ஒரு பழக்கமாக மாற்றினால் உங்கள் மாதவிடாய் காலங்கள் பெரிதும் பாதிக்கப்படும். ஏனென்றால், இது உங்கள் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது, இது இறுதியில் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களுக்கு வழிவகுக்கும்.
-
வறுத்த மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால், உங்கள் ஹார்மோன்கள் நிச்சயமாக பாதிப்பினை ஏற்படுத்தும். தாமதமான மாதவிடாய் காலங்களுக்கு இது முக்கிய காரணமாக இருக்கிறது.
- நீங்கள் தூக்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தாமல் இருக்கும் பொழுது அவை ஹார்மோன் அளவில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன. இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும். மேலும், தூக்கமின்மை மெலடோனின் அளவின் உற்பத்தியில் ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்துகிறது, எனவே கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US