ஸ்காட்லாந்தில் சிறிய ரக விமானம் விபத்து: இரண்டு பேர் வரை உயிரிழப்பு
Lighter Aircraft Accident in Scotland 2 Persons Dead: ஸ்காட்லாந்தில் நிகழ்ந்த சிறிய ரக விமான விபத்தில் 2 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
விமான விபத்து
ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங்(Stirling) பகுதியில் உள்ள ட்ரைமென்(Drymen) நகருக்கு வடகிழக்கே பைப்பர் டொமாகாக் II (Piper Tomahawk II) என்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
முதற்கட்ட தகவல் படி, இந்த விமானத்தில் பயணித்த 80 வயது முதியவரும், 16 வயது சிறுவனும் இந்த விபத்தில் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது.

கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து மதியம் 4.15 மணிக்கு புறப்பட்ட விமானம், புறப்பட்ட 20 வது நிமிடத்தில் அனைத்து தொடர்புகளையும் இழந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அவசர கால மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விபத்தில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக ஸ்காட்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்து புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.