பிரான்சின் ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்: வெளியான புகைப்படங்கள்
பிரான்சில் ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம், 1889ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஐந்து தாக்கங்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் ஈபிள் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது. அதனை புகைப்படம் எடுத்த பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் குலிக் பெர்ட்ரான்ட், கோபுரத்தின் மீது மின்னல் 4 முறைக்கு மேல் தாக்கியதாக தெரிவித்தார்.
மின்னல் கோபுரத்தை பாதிக்காது என்றும், இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் மின்னல் தாக்கியதில் 15 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரான்சின் பல நகரங்களில் கடும் மழை மற்றும் புயல் காற்றினால் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களும் IIe-de-France ஆரஞ்சு பட்டியலில் சேர்க்கப்பட்டது.