காதலி கண்முன்னே... கடற்கரையில் மின்னல் தாக்கி பலியான பிரித்தானிய இளைஞர்
கிரேக்கத்தில் விடுமுறையை கொண்டாட சென்ற பிரித்தானிய இளைஞர், காதலி கண்முன்னே மின்னல் தாக்கி பலியான சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
படகில் ஏறும் போது மின்னல் தாக்கியது
கிரேக்க அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில், பலியான இளைஞரின் பெயர் ஸ்காட் சேடன் எனவும் 26 வயது எனவும் குறிப்பிட்டுள்ளனர். Rhodes பகுதியில் அமைந்துள்ள இவர்களின் விடுமுறை இல்லத்தில் தங்கியிருந்த ஸ்காட் சேடன் சம்பவத்தின் போது கடற்கரையில் இருந்து துடுப்பு படகில் ஏறும் போது மின்னல் தாக்கியுள்ளது.
Credit: Facebook
குறித்த இளைஞர் துடுப்பு படகில் ஏறுவதை, அவரது காதலி கடற்கரையில் இருந்து காணொளியாக பதிவு செய்து வந்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. லிவர்பூல் பகுதியை சேர்ந்த ஸ்காட் அடிக்கடி கிரேக்கத்தில் அமைந்துள்ள இவர்களின் விடுமுறை இல்லத்தில் தங்கி விடுமுறையை கழிக்க செல்வார் எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
காப்பாற்ற தீவிர முயற்சிகள்
மின்னல் தாக்கிய சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவ அவசர உதவிக் குழுவினர் அவரை காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
Credit: Facebook
மட்டுமின்றி, ஸ்காட்டின் காதலியான Wander Machado எனபவரும் முதலுதவிகள் அளித்துள்ளார் என்றே கூறப்படுகிறது. பெரும்பாலும் கிரேக்க நாட்டில் தங்கியிருப்பதால், ஸ்காட் உள்ளூர் மொழி பேசுவார் எனவும், சமீபத்தில் தமது பிரேசில் நாட்டவரான காதலியுடன் கிரேக்கத்திற்கு சென்றார் எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்ட தகவலில், சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் இருந்த பல சுற்றுலாப்பயணிகள் உதவிக்கு விரைந்துள்ளனர். மட்டுமின்றி கடலில் இருந்து சுற்றுலாப்பயணிகளே அவரை கரைக்கு மீட்டு வந்துள்ளனர்.
Credit: Facebook